திராட்சை ஜூஸில் இந்த பொருளை சேர்த்தால் சளி பிடிக்காதாம் .!

grape juice 1

Grape juice– சளி பிடிக்காமல் இருக்க கருப்பு திராட்சை ஜூஸ் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.

கருப்பு திராட்சை:

பச்சை வகை திராட்சைகளை விட கருப்பு திராட்சை அதுவும் விதையுள்ள கருப்பு திராட்சையில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு கருப்பு திராட்சை எடுத்துக் கொள்ளும் போது சளி பிடிப்பது, தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

குறிப்பாக ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு இவ்வாறு நேரலாம். அதற்காக அறவே கருப்பு திராட்சையை ஒதுக்கி விடக்கூடாது ஏனெனில் அதில் எண்ணற்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ,விட்டமின் சி சத்து ,போலிக் ஆசிட் , ,தாதுக்கள் நிறைந்துள்ளது.

குறிப்பாக அல்சர் புண் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும் பழச்சாறுகளில் இதுவும் ஒன்று .கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் திராட்சைக்கு உள்ளது.

கழுவும் முறை:

திராட்சை கொடியில் வளரக்கூடிய ஒரு பழமாகும். அதில் பூச்சிகள் வராமல் இருக்க பலவிதமான ரசாயனங்கள் அதிகம் தெளிக்கப்படும். அதனால் திராட்சையை கழுவும் போது கல் உப்பு சேர்த்து கழுவிக்கொள்ளவும் .

தேவையான பொருட்கள்:

  • கருப்பு திராட்சை=200 கிராம்
  • சர்க்கரை =தேவையான அளவு
  • மிளகு தூள் =அரை ஸ்பூன்
  • கல் உப்பு =அரை ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு =அரை ஸ்பூன்

செய்முறை:

மிக்ஸியில் கருப்பு திராட்சை ,மிளகுத்தூள் ,கல் உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதை வடிகட்டி எடுத்து அதனுடன் அரை ஸ்பூன்  எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் தொண்டை கரகரப்பு ஏற்படாது ,சளி பிடிக்காது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்