உடலில் தையல் இருக்கும் தழும்பை போக்க வேண்டுமா? இதை பாருங்கள்..!
உடலில் இருக்கும் தையல் தழும்பை போக்க வேண்டுமானால், இந்த முறையை பின்பற்றி பாருங்கள்.
தற்காலத்தில் உடலில் தழும்பு ஏற்படுவது என்பது சாதாரணமான ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும். இது அவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல்வேறு விதமான பாதிப்பை ஏற்படுத்தும். சிவப்பு அல்லது வெள்ளைநிறத்தில் கோடுகள் போல பெண்களுக்கு இடுப்பு, வயிறு, தொடை போன்ற இடத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும்.
இந்த கோடு இருப்பதனால் உங்களுக்கு வலியோ, எரிச்சலோ வீக்கமோ ஏற்படாது. ஆனால் அது உங்களது அழகை குறைத்து விடும். அதனால் பெண்களுக்கு தன்னம்பிக்கை குறைய ஆரம்பிக்கும். ஒரு வித தயக்க நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதுபோன்ற நிலையில் இருக்கிறீர்கள் என்றால் கவலை படவேண்டாம் எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்கிவிடலாம்.
டிப்ஸ் 1: ஸ்ட்ரெட்ச் மார்க் நீங்க மிக எளிய வழி பிளீச்சிங் செய்யலாம். இதற்கு பயன்படுத்த வேண்டிய வீட்டு பொருட்கள் எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா. மேற்சொன்ன இரண்டு பொருட்களையும் சேர்த்து கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். இதனை ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும் இடத்தில் தடவி, ஸ்கிரப் செய்து கொள்ள வேண்டும். அழுத்தம் கொடுத்து ஸ்கிரப் செய்ய வேண்டாம். லேசாக மட்டும் தேய்க்கவும். பின்னர் இதனை 10 நிமிடம் கழித்து சுத்தம் செய்து விடலாம். இதே போன்று வாரத்திற்கு 4 முறை செய்து வரலாம்.
டிப்ஸ் 2: சந்தனத்தை வீட்டில் பொடியாக அரைத்து வைத்து கொள்ளுங்கள். இது அவசியமான ஒன்று. இந்த சந்தன பொடியுடன் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இதனை ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும் இடத்தில தடவி கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட் காய்ந்த பின்னர் அதனை சுத்தம் செய்து விடுங்கள். இதனை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்களுக்கு ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும் தடம் குறைய ஆரம்பிக்கும்.
டிப்ஸ் 3: எண்ணெய் வைத்து மசாஜ் செய்வது உங்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும். அதனால் தேங்காய் எண்ணெய் இருந்தால் அதனை வைத்தே நீங்கள் ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும் இடத்தில் மசாஜ் செய்யலாம். இல்லையெனில் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இருந்தால் கூட அதை வைத்து நீங்கள் ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும் பகுதியில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது தவிர கற்றாழை ஜெல் இருந்தால் அதனை வைத்து கூட ஸ்ட்ரெட்ச் மார்க் பகுதியில் நீங்கள் மசாஜ் செய்யலாம். இதன் மூலமாக உங்களுக்கு ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும் தழும்பு குறையும்.