சளி எவ்வாறு உருவாகிறது? சளி தொல்லை உள்ளவர்கள் பால் குடிக்கலாமா?

Default Image

இன்று சிறியவர்கள் முதல்  முதியவர்கள் வரை அனைவருக்கும் சளி தொல்லை ஏற்படுகிறது. சளி எவ்வாறு உருவாகிறது? சளி தொல்லை இருப்பவர்கள் பால் அருந்தலாமா? 

இன்று சிறியவர்கள் முதல்  முதியவர்கள் வரை அனைவருக்கும் சளி தொல்லை ஏற்படுகிறது. இதற்க்கு சிலர் காலங்காலமாக மருந்து எடுத்தாலும், இதில் இருந்து சிலருக்கு பூரண சுகம் கிடைப்பதில்லை. அதே சமயம் பலருக்கு சளி எவ்வாறு உருவாகிறது என்று தெரிவதில்லை.

தற்போது இந்த பதிவில், சளி எவ்வாறு உருவாகிறது என்றும், இந்த பிரச்சனை உள்ளாவர்கள் பால் குடிக்கலாமா? என்பது பற்றியும் பார்ப்போம்.

சளி எவ்வாறு உருவாகிறது?

மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகிய இடங்களில் கோழை போன்ற ஒரு படலம் உள்ளது. இது  ‘மியூசின்’ எனும் திரவத்தை சுரக்கிறது. இதனை பார்ப்பதற்கு பளிங்கு போன்று இருக்கும். இது பிசின் போல ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது. இது நமது சுவாச பாதை வறண்டு விடாமல் இருக்க உதவுகிறது. காற்றின் மூலம் வரும் தூசு மற்றும் கிருமிகள் இதில் ஒட்டிக் கொள்வதால், காற்று சுத்தமாகி நுரையீரலுக்குள் செல்கிறது.  இதனால், நாம் இயல்பாக சுவாசிப்பதற்கு உதவுகிறது.

அதே சமயம், காற்றில் அதிக அளவு தூசு மற்றும் கிருமிகள் கலந்து  வந்தால், இந்த மியூசின் சுரப்பு அதிகமாக காணப்படும். இந்த மியூசினுக்கு கிருமிகளுடன் போராடக் கூடிய குணம் கொண்டது. இது போராடும் போது பல கிருமிகள் இறக்கும். அதே சமயம் பழைய கோழை படலமும் அழிந்து விடும். இதனால், இறந்து போன கிருமிகள், அழிந்து போன கோழைப்படலச் செல்கள் அனைத்தும், மியூசின் படலத்தில் கலந்து சளியாக உருவாகிறது.

இந்த மியூசின் திரவம் சளியாக மாறியவுடன், பழுப்பாகவோ, மஞ்சளாகாவோ காணப்படுகிறது. இந்த சளியின் நிறம் கோழை படலத்தை பாதிக்கும் கிருமியை பொருத்தும் நிற மாற்றம் ஏற்படுகிறது. இதில், இந்த கிருமிகளின் பாதிப்பு மூக்கில் இருந்தால், மூக்கு சளி என்றும், தொண்டையில் இருந்தால் தொண்டை சளி என்றும், நுரையீரலில் இருந்தால் நெஞ்சு சளி என்றும் நாம் கூறுவதுண்டு.

பால் குடிக்கலாமா?

ஒரு சிலருக்கு பால் ஒவ்வாமை பிரச்னை இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் பால் குடித்ததும், வயிற்று உப்பிசம், வயிற்று வலி, இரைச்சல், வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.  மேலும்,மூக்கு  ஒழுகல், தும்மல், இருமல், சளி போன்ற பிரச்னையும் ஏற்படும். இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பால் குடிப்பதை தவிர்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்