மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வாந்தி ,குமட்டல் சரி செய்வதற்கான வீட்டு மருத்துவம் !!!!!
மகப்பேறு என்பது மாதர் தமக்கே உரித்தான ஒன்று . பிள்ளை பேறு முதல் மூன்று மாதக்காலத்தில் வாந்தி,குமட்டல்,படபடப்பு ,அசதி,மயக்கம் ,பசியின்மை பெண்களுக்கு ஏற்படுவது மிகவும் இயற்கையான ஒன்று.சிலருக்கு 10 மாதங்களும் தொடரும் நிலை ஏற்படலாம் . இதனால் பெண்கள் மிகவும் சோர்வடைவதும் உண்டு .அதனை சரிசெய்வதற்கு ஜீரண உறுப்பைத்தூண்டி பசியின்மை மற்றும் மயக்கம் சரி செய்வது எவ்வாறு என்று எளிய வீட்டு வைத்தியம் ஒன்றை காண்போம்.
தேவையான பொருட்கள் :
சீரகம் -1/2 தேக்கரண்டி
மிளகு -10
கருவேப்பில்லை -சிறிதளவு
தனியா -1/2 தேக்கரண்டி
பனக்கற்கண்டு-1 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் மிளகு,சீரகம் ,தனியா ஆகியவற்றை எடுத்து தட்டி வைத்து கொள்ளவும் . ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கறிவேப்பிலை ,சீரகம்,மிளகு ,தனியா கலவையை போட வேண்டும்.ஒரு டம்ளர் நீர் ஊற்றி பின்பு அதை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி தேநீர் ஆக்கி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.பேறு காலத்தில் ஏற்படும் பிரச்சனைக்களை சரி செய்ய உதவியாக இருக்கும் .