ரத்தக் கொதிப்பை குறைக்கும் உணவுகள் இதோ..!

ரத்தக்கொதிப்பு -ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
உயர் ரத்த கொதிப்பு :
ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமானால் ரத்த கொதிப்பு ஏற்படுகிறது.ரத்த கொதிப்பு வந்துவிட்டாலே அதன் இணைப்பாக சர்க்கரை நோய் ,கல்லிரல் பாதிப்பு ,கண்கோளாறும் வந்துவிடும் .நம் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை பராமரித்தால் இதிலிருந்து தப்பித்து விடலாம் .
காரணங்கள்:
உடலில் உப்பு அதிகமாக இருப்பது ,பரம்பரை பிரச்சனை இருப்பது, உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
உப்பின் அளவு குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஒரு நாளைக்கு ஐந்து கிராம் உப்பு போதுமானது. அதேபோல் எண்ணெயின் அளவும் ஒரு நாளைக்கு ஐந்து மில்லி போதுமானது. மேலும் எண்ணெயில் பொரித்த ,வருத்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ரத்த கொதிப்பை குறைக்கும் உணவுகள்:
தயிரை மதிய உணவுகளில் எடுத்துக்கொள்ளவும். பச்சை நிற கீரைகள் குறிப்பாக பசலைக்கீரை, புளிச்சக்கீரை .காய்கறிகளில் பொட்டாசியம் சத்து மிக அதிகமாக இருக்கும் சோடியம் குறைவாக தான் இருக்கும். அதனால் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
காய்கறிகள் :
முள்ளங்கி ,மக்காச்சோளம், கருணைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, கொத்தவரங்காய் ,அவரைக்காய், முருங்கைக்காய், கத்திரிக்காய் ,வெள்ளரிக்காய், பீர்க்கங்காய், நூல்கோல், சௌசௌ, காராமணி போன்ற பயிர் வகைகள் மற்றும் பருப்பு வகைகள் வாழைத்தண்டு ஆகியவற்றில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.
பழங்கள் :
பழங்களில் வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. ஆப்பிள், விட்டமின் சி அதிகம் உள்ள பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவை தர்பூசணி போன்ற அனைத்து பழங்களும் எடுத்துக் கொள்ளலாம். கூடவே சர்க்கரை நோய் இருந்தால் பழங்களை முறையாக கையாள வேண்டும்.
ஏனென்றால் பழங்களில் ப்ரக்டோஸ் இருக்கும். இதனால் ஒரு துண்டு பழம் எடுத்துக் கொள்வது போதுமானதாக இருக்கும் .மேலும் நன்கு பழுத்த பழங்களை தவிர்க்க வேண்டும்.
அசைவ வகையில் அவித்த முட்டை, மீன் ,கோழி போன்றவற்றை வேக வைத்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பொறித்ததை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆட்டு இறைச்சி, சிவப்பு இறைச்சி முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உணவுமுறையுடன் உடற்பயிற்சி ,தியானம் ,மேற்கொள்ளவும் .டென்ஷனை குறைக்கவும் .
ஆகவே நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் அளவு தான் மிக முக்கியம் அதை கவனமுடன் பின்பற்ற வேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025