Pregnancy food– கர்ப்பிணிகள் வாந்தி நிற்பதற்கும் மற்றும் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் காணலாம்.
கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டிய நாட்களாகும் .இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு வாந்தி, தலை சுற்றல் தூக்கமின்மை போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
முதல் மூன்று மாதங்கள் சிசுவானது கருவிலிருந்து குழந்தை உருவம் பெறும் காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் வாந்தி இருப்பது இயல்பான ஒன்றுதான். வைட்டமின் பி6 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் பி 6 அதிகம் உள்ள வாழைப்பழம், முழு தானியங்கள், புதினா, மாதுளை பழம், உலர் திராட்சை மேலும் வெங்காயத்தை சட்னி செய்து சாப்பிடுவது போன்றவற்றை எடுத்துக் கொண்டால் வாந்தி கட்டுக்குள் வரும்.
கர்ப்ப காலத்தில் சில குறிப்பிட்ட சத்துக்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக அயன், போலிக் ஆசிட், விட்டமின் சி, கால்சியம், புரதம்,பி 12 போன்ற அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நாளைக்கு 40 மில்லி கிராம் அயன் தேவைப்படும். இது சிசுவின் மூளை வளர்ச்சிக்கும், ஹீமோகுளோபின் உற்பத்திக்கும் தேவைப்படுகிறது .ஆட்டு ஈரல் ,கோழி ஈரல், விதை வகைகள், கீரை வகைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
இந்த இரும்பு சத்தை எடுத்துக் கொள்ளும் போது வைட்டமின் சி உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் .ஏனென்றால் இரும்பு சத்தை உட் கிரகித்துக் கொள்ள வைட்டமின் சி தேவைப்படுகிறது.
சிட்ரஸ் பல வகைகளில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இரும்புச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது அயன் உறிஞ்சுவதை தடுக்கும்.
ஒரு நாள் ஒன்றுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு 570 மைக்ரோகிராம் போலிக் ஆசிட் எடுக்கவேண்டும் . இது குழந்தையின் நரம்புகளுக்கும், முதுகு எலும்பு வளர்ச்சிக்கும் அவசியம்.
பால் ,சீஸ் ,தானியங்கள் குறிப்பாக பச்சைபயிறு ,முட்டை ,சிக்கன், கீரை வகைகள், ப்ரோக்கோலி, காலிபிளவர், முட்டைக்கோஸ், சிட்ரஸ் பழ வகைகளான சாத்துகுடி ,ஆரஞ்சு ,லெமன் ஆகியவற்றிலும் உள்ளது .
கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 2.75 மில்லி கிராம் வைட்டமின் பி12 எடுத்துக்கொள்ள வேண்டும் .இது சிசுவின் வளர்ச்சிக்கும் ,மரபணுக்களின் வளர்ச்சிக்கும், சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் தேவைப்படுகிறது. மீன்,மாமிசம் ,ஈரல் முட்டை ,பால், தயிர் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 250 மைக்ரோகிராம் அயோடின் எடுத்துக்கொள்ள வேண்டும் .இது தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு அவசியமானது .சிசுவின் மூளை வளர்ச்சிக்கும் அவசியம்.
இந்த PUFA தொப்புள்கொடி வளர்ச்சிக்கும் ,புதிய ரத்த நாளங்கள் ஏற்படவும் தேவைப்படுகிறது .இது மீன், விதைகள், சமையல் எண்ணெய் போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் சிசுவின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வலுவுக்கும் புரதம் மிக அவசியம். தினமும் வேகவைத்த சுண்டல் சாப்பிடுவது நல்லது, மேலும் மீன்,கோழி ,முட்டை ,பாதாம் பருப்பு ,வேர்க்கடலை, பயறு மற்றும் பருப்புகளை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பப்பாளி, அண்ணாச்சி, மாம்பழம் ,பலாப்பழம், சிக்கன் ,மட்டன்,ஆகியவற்றை முதல் மூன்று மாதங்களுக்கு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது அதிக உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தி கருவை கலைக்க செய்யும்.
இதுபோல் ஊட்டச்சத்து அவசியம் உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து குறைவாக எடுத்துக் கொண்டால் 40 வாரங்களுக்கு குறைவாக குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. அல்லது எடை குறைவாக பிறக்கும் .
இதனால் குழந்தைகளுக்கு இதய நோய், சர்க்கரை நோய் ,மூளை வளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்படலாம். அதனால் ஊட்டச்சத்து மற்றும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது அவசியம் .எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கியமில்லை எந்த உணவுகளை சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம்.
கர்ப்பிணிகள் தன்னுடைய சாதாரண எடையிலிருந்து கர்ப்ப காலத்தில் 10-12 கிலோ எடை அதிகமாக வேண்டும். இது ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழி வகுக்கும்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…