பசியை தூண்டும் சூப்பரான உணவுகள் இதோ..!

Published by
K Palaniammal

Hungry increased food-இயற்கையான முறையில் பசியை தூண்டும் உணவுகள் பற்றி இப்பதிவில் காணலாம்.

நம் அனைவரது இல்லங்களிலும் பெரும்பாலும் குழந்தைகளின் பசியை தூண்டுவதற்காக பல ஆங்கில மருந்துகளை கொடுப்போம். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்த மருந்துகளை எடுத்து  கொண்டால் மட்டுமே பசி ஏற்படும் நிலை உருவாகிவிடும்.

அவ்வாறு இல்லாமல் உணவு மூலமாகவே  நம் பசியை தூண்ட முடியும். குறைவான செரிமானம் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது மற்றும் குழந்தைகள்  விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருத்தல் போன்ற காரணங்களால் பசி எடுப்பதில்லை.

பசியை தூண்டும் உணவு வகைகள்:

பழச்சாறுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் பசி தூண்டப்படும் குறிப்பாக மாதுளை ஆரஞ்சு ஆப்பிள் போன்ற பழங்களை ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம்.

மிளகாய் போன்ற காரம் நிறைந்த உணவுகளை அக்கண்டாலும் பசி தூண்டப்படும்.நார்த்தங்காய் ஊறுகாய் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம் .

தண்ணீருக்கு பதில் மோர் குடிப்பதால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவதை தடுப்பதோடு செரிமானத்தை அதிகப்படுத்தி நல்ல பசியை ஏற்படுத்தும்.

இஞ்சியை உணவில் ஏதேனும் ஒரு வழியில் சேர்த்துக் கொள்ளவும் அல்லது டீயாக குடித்து வரலாம் இது பசியை தூண்டுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

பிரண்டையை சட்னி ஆகவோ துவையலாகவோ எடுத்துக் கொள்வதன் மூலம் வாயு மற்றும் செரிமான கோளாறுகளை சரி செய்து பசியை அதிகரிக்கும்.

சாப்பிடுவதற்கு முன் இனிப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இனிப்பில் அதிக அளவு குளுக்கோஸ் உள்ளது, இது பசியை உண்டாக்கும்.

ஆப்பிளை விட பேரிக்காயில் மூன்று மடங்கு அதிக சத்துக்கள் உள்ளது. பேரிக்காய் பசியை தூண்ட  செய்யும் பழங்களில் ஒன்று.

புதினாவை சட்னி ஆகவோ டீயாகவோ எடுத்துக் கொள்வதன் மூலம் பசி அதிகரிக்கும் .மேலும் இதன் இலைகளை வாயில் போட்டு மென்று வந்தால் பல் ஈறு வலுபெறும். உடலில் நுழையும் நோய் கிருமிகளை அழிக்கவும் செய்யும்.

கருவேப்பிலையில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் நம் உடலில் பசி தூண்டப்படுகிறது மேலும் நெல்லிக்காய் எலுமிச்சை போன்றவற்றை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் பசி அதிகரிக்கும்.

பசியை தூண்டும் இயற்கை மருந்து தயாரிக்கும் முறை :

ஒரு கப் ஓமம் ,அரை கப் சீரகம், கால் கப் மிளகு, கால் ஸ்பூன் பெருங்காயம் இவற்றை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.

சாப்பிடுவதற்கு முன் இரண்டு ஸ்பூன்   சாதத்தில்   அரை ஸ்பூன் இந்த அரைத்த பொடியை சேர்த்து சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடவும் இதனால் செரிமானம் அதிகரித்து நன்கு பசி தூண்டப்படும்.எனவே பசியை தூண்ட இந்த இயற்கையான முறைகளை மேற்கொள்ளுங்கள்.

Recent Posts

SA vs IND : இரண்டு சதம் …தொடரை கைப்பற்றிய இந்திய அணி! சஞ்சு, திலக் அதிரடியில் துவம்சமான தென்னாப்பிரிக்கா!

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…

8 hours ago

“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…

8 hours ago

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

10 hours ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

11 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

11 hours ago