அதிக சூடாக இருக்கும் உணவுகள் அல்லது திரவங்களை குடிப்பதால் உங்கள் நாக்கு புண்ணாகிவிடும். உங்கள் நாக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்த உறுப்பு ஆகும். இது நீங்கள் உண்ணும் உணவுகளின் சுவைகள் மற்றும் அமைப்புகளை அடையாளம் காண உதவுகிறது. இது பாப்பிலா எனப்படும் சிறிய புடைப்புகளைக் கொண்டுள்ளது.
சில பாப்பிலாக்களில் சுவை மொட்டுகள் உள்ளன. உங்கள் நாக்கை எரிப்பது பாப்பிலா மற்றும் உங்கள் சுவை மொட்டுகளை சேதப்படுத்தும். இதனால், உங்கள் நாக்கு உணவு மற்றும் பானங்களை சுவைப்பதை கடினமாக்கும்.
எரிந்த நாக்கை குணப்படுத்த 5 வழிகள்
1. குளிர்ந்த நீர் குடிக்கவும்
உங்கள் நாக்கில் எரிச்சலாக இருந்தால், குளிர்ந்த நீர் குடிப்பதனால் எரிச்சலையும் வலியையும் குறைக்கும். உங்கள் எரிந்த நாக்கின் வெப்பநிலையைக் குறைக்க ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரை பருகவும். இதனால, உமிழ்நீர் ஓட்டம் சரியாக இருக்கும். குறிப்பாக, சூடான பானங்களான தேநீர், காபி மற்றும் உணவுப் பொருட்களை உண்ணுவதை ஒரு நாள் தவிர்க்கவும், இது உங்கள் எரிந்த நாக்கை குணப்படுத்த உதவும்.
3. தேனை பயன்படுத்தவும்
நாக்கில் எரிச்சல் மற்றும் சூட்டு கொப்பளம் இருப்பதை குணப்படுத்த தேன் மற்றொரு சிறந்த வழியாகும். தேன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் தீக்காயங்களிலிருந்து எளிதாக மீண்டு விடும். இந்த தேனை முன்பு காலங்களில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
3. குளிர்ந்த உணவுகளை உண்ணுங்கள்
அடுத்த 3-4 நாட்களுக்கு, உங்கள் நாக்கில் மென்மையை உணரும் போது, எரிச்சலைக் குறைக்க குளிர் மற்றும் மென்மையான உணவுகள் மற்றும் பானங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர், உங்கள் எரியும் நாக்கிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நாக்கில் சிக்கிருக்கும் உணவு குப்பைகளை அகற்ற தண்ணீர் நிரைய குடிக்க வேண்டும்.
4. உப்பு நீரில் கழுவவும்
உங்கள் வாய் குளிர்ந்ததும், சிறிது சூடான உப்பு நீரில் கழுவவும். உப்பு நீரை குடித்து நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும். சூடான உப்பு நீரில் ஆண்டிசெப்டிக் பண்புகள் உள்ளன, அவை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். இப்படி செய்வதால் நாக்கு எரியும் அசௌகரியத்தை எளிதாக்க உதவுகிறது. உங்கள் நாக்கில் தேனைப் பயன்படுத்திய பிறகு, இனிப்பு இருக்கும் என்பதால், பற்கள் சிதைவடையாமல் இருக்க தூங்கும் முன் பல் துலக்குவது மிகவும் நல்லது.
5. ஓவர்-தி-கவுண்டர் வலி மருந்து
மேலே கூறப்பட்ட வீட்டு வைத்தியத்தை முயற்சித்த பிறகும் உங்கள் நாக்கிற்கு வலியாக இருந்தால், எரிச்சலைக் குறைக்க OTC வலி நிவாரணிகளைப் பயன்படுத்தவும். தீக்காயத்திற்கு சிகிச்சையளிக்க நீங்கள் இப்யூபுரூஃபன் அல்லது பிற மருந்துகளை மருந்தகத்தில் வாங்கலாம். உங்கள் நாக்கு எரிவதற்கு என்ன காரணம் என்று தெரியாவிட்டால் அல்லது வலி குறையவில்லை என்றால், வீட்டிற்கு அருகிலுள்ள பல் மருத்துவரை அணுகவும்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…