Headache Problem : தலைவலி பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? இதோ உங்களுக்கான தீர்வு…!

Headache

இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தலைவலி. அதிலும், ஒற்றை தலைவலி உள்ளவர்கள் மிகவும் சிரமத்தை சந்திப்பார். தலைவலி, அதிகமான மனஅழுத்தம், யோசனை, தலையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தலைவலி ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், பக்கவிளைவுகளின்றி வீட்டிலேயே செய்து குடிக்க கூடிய இயற்கையான பானம் பற்றி பார்ப்போம்.

 தேவையானவை 

  • மல்லி – 1 ஸ்பூன்
  • சுக்கு தூள் – அரை ஸ்பூன்
  • ஏலக்காய் – 2
  • பனங்கற்கண்டு –  ஸ்பூன்

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு ஸ்பூன் மல்லியை மிக்ஸியில் போட்டு தூளாக நன்கு அரைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனுள் மல்லித்தூள், சுக்குத்தூள், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு, தண்ணீர் ஒரு டம்ளராக குறையும் வரை நன்கு கொதிக்க விட்டு, ஒரு டம்ளரில் வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பனங்கற்கண்டு போட்டு கலந்த பின் குடிக்க வேண்டும்.

நன்மைகள் 

இந்த பானத்தை குடித்து வந்தால், இது தலைவலி பிரச்சனையை போக்குவதோடு, செரிமான பிரச்சனையையும் போக்குகிறது. இந்த பானம் கலோரியை குறைக்க உதவுவதால், உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்