பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரித்து விட்டதா….? ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கும் சில வழிமுறைகள்…!

post pregnancy weightloss

தாய்மை என்பது மிகவும் புனிதமான ஒன்று. இருப்பினும், பெண்கள் பலர் தங்கள் பிரசவத்திற்கு பின்பு  உடல் எடை அதிகரித்து விட்டது என கவலைப்படுகிறார்கள். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடல் எடை கூடுவது சகஜம் தான். ஆனால் குழந்தை பிறந்த பின்பு தங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, பல பெண்கள் உடற்பயிற்சி மையங்களுக்கு சென்று கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

இருப்பினும், அவ்வாறு இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இயற்கையான சில வழிமுறைகளை அறிந்து கொண்டு, உடல் எடையை குறைப்பது எப்படி என அறிய விரும்பும் பெண்களா நீங்கள்? இன்று எப்படி பிரசவத்திற்கு பின் உடல் எடையை எளிதில் குறைப்பது என்பதற்கான சில வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தாய் பால்

 

தாய்ப்பால் கொடுப்பது உடல் எடையை குறைக்க உதவுமா என்பது பற்றி தற்போது வரை விவாதம் நடந்து கொண்டிருந்தாலும், குழந்தைகளுக்கு தாய் பாலூட்டும் தாய்மார்களே தாங்கள் விரைவில் உடல் எடையை இழப்பதாக கூறுகின்றனர். மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட எடையை வேகமாக குறைக்க முடியும் எனவும் பல ஆய்வுகள் கூறுகிறது.

எனவே பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மேற்கொள்ள கூடிய பெண்கள், தங்கள் குழந்தைகளை விட்டுவிட்டு தாய்ப்பால் கொடுக்காமல் உடற்பயிற்சி மேற்கொள்ளக்கூடிய சமயத்தில் குழந்தைகளுக்கு முறையாக தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் நமது உடலில் உள்ள கொழுப்புகளை ஒரு நாளைக்கு தோராயமாக 300 கிராம் வரை குறைக்க முடியும். எனவே உடல் எடையை குறைப்பதற்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கும் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் நல்லது.

எடை குறைப்பு

 

கர்ப்ப காலத்தின் பின் உடல் எடை குறைய வேண்டும் என்பதற்காக நாம் டயட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நீங்கள் புதிதாக பிறந்த ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் பொழுது, மன அழுத்தத்துடன் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது பற்றி யோசிப்பதும், சாப்பாட்டை புறக்கணிப்பதும் நமது உடல் எடை அதிகரிப்பதற்கு தான் வழி வகுக்கும். எனவே முன்பு சாப்பிட்டது போலவே ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும். மேலும் குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் இதன் மூலமாக உங்களுக்கு உடல் எடையை சரியான அளவில் இருக்கும்.

ஊட்டச்சத்து

 

கர்ப்ப காலத்தின் பொழுது அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணக் கூடிய தாய்மார்கள், குழந்தை பிறந்த பின்பு உடல் எடையை குறைப்பதற்காக ஊட்டச்சத்துள்ள உணவுகளை புறக்கணித்து விடுகிறார்கள். அது மிகவும் தவறு. மீன், இறைச்சி, கோழி ஆகியவற்றில் ஒமேகா 3, ஃபைபர் மற்றும் புரதம் நிறைந்து காணப்படுகிறது.

இது நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கவும், நம்மை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவும். எனவே குழந்தை பிறந்ததற்கு பின்பும் ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கியமான சிற்றுண்டிகளையும் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. அதுபோல உடல் எடை அதிகரிக்காமல் ஊட்டச்சத்து கிடைப்பதற்காக ஆப்பிள், கேரட், கோதுமை பிஸ்கட் ஆகியவற்றையும் வேர்க்கடலைகளையும் சாப்பிடுவது மிகவும் நல்லது.

நீர்சத்து

 

கர்ப்ப காலத்திற்கு முன் மற்றும் கர்ப்ப காலத்திற்கு பின்பதாக நமது உடலை எப்பொழுதும் நீர் சத்துள்ளதாக வைத்திருப்பது முக்கியம். பெரும்பாலும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் நமது பசி தடுக்கப்படுகிறது. மேலும் இது நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது நமது உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் வழிவகுக்கும்.

யோகா & நடை பயிற்சி

 

கர்ப்ப காலத்திற்கு பின்பதாக உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்பக்கூடிய பெண்கள் ஒன்று நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம் அல்லது வீட்டில் இருந்தே யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். இது நமது உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்