கொய்யா பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். கொய்யா இலையில் பல சத்துக்கள் உள்ளது. கொய்யா மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது.
‘கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் B 6, கோலைன், வைட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்ற சத்துக்கள் உள்ளது. கொய்யா இலையில் துவர்ப்பு தன்மை உடையது.
கொய்யா இலைகளில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி பாக்டீரியா எதிர்ப்பு, நார்ச்சத்து வைட்டமின் சி, குறைந்த க்ளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் Quercetin போன்றவை உள்ளன. குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் குறைக்க உதவுகிறது. கொய்யா இலை இயற்கை வலி நிவாரணியாக இருக்கிறது. இதில் Carotenoids மற்றும் Flavonoids அதிகம் உள்ளன.
ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் அளவு நீரினை நன்றாக கொதிக்க வைத்து அதில் 5 இலைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது கொதிக்கும்போதே அதனுடன் சிறிதளவு இஞ்சி, டீத்தூள், ஏலக்காய், சீரகம் போன்றவற்றை போட்டு கொதிக்க வைத்து, தேவையான அளவு நாட்டு வெல்லம் சேர்த்து இறக்கினால் கொய்யா இலை டீ ரெடி. நன்றாக வடிகட்டி காலை, மாலை இருவேளையும் அருந்தலாம்.
கொய்யா இலையை தேநீராக உட்கொள்ளும் போது, உடல் எடை குறைய இது உதவுகிறது. இதில் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் உடலில் அதிக கொழுப்பு உற்பத்தியை தடுக்கிறது. உடல் எடை அதிகம் கொண்டவர்கள் கொய்யா இலை தேநீர் அருந்துவதன் மூலம் எடையைக் குறைக்க முடியும். உடலில் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…