பச்சை வாழைப்பழத்தில் உள்ள பசுமையான நன்மைகள்

Published by
லீனா
  • உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பச்சை வாழைப்பழத்தில் உள்ள பல விதமான நன்மைகள்.

நம்மில் அதிகமானோருக்கு பழ வகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பழங்கள் என்றால் பிடிக்கும். அதிலும், சிலருக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று தான்.

Image result for பச்சை வாழைப்பழத்தில்

வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளது. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நன்மை பயக்கக் கூடியதாக தான். அந்த வகையில் நாம் இன்று பச்சை வாழைப்பழத்தில் உள்ள பயன்கள் பற்றி பார்ப்போ.

குடல் புண்

இன்று பலரும் பல வகையான வேலைகள் செய்து வருகின்றன. அதிகாலையில் நேரத்திற்கே வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால், சரியாக சாப்பிடாமல் சென்று விடுகின்றனர்.

இப்படிப்பட்டவர்களுக்கு தான் குடல் புண் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், குடல் புண்களை ஆரஞ்ச் செய்து பூரண  அளிக்கிறது.

மேலும், குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்துக்கு இருக்கிறது.

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் ஒரு  மருந்தாகும். ஏனென்றால், பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிகமாகி உள்ளதால், இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்து, சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருகிறது.

இதயநோய்

இதய நோய் பிரச்னை உள்ளவர்களுக்கு பச்சை வாழைப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்கு பலனளிக்காது.

உடல் எடை

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பச்சை பலத்தை தொடர்ந்து சாப்பிடலாம். பச்சை பழத்தில் உடல் எடையை குறைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளதால், பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைந்து விடும்.

இரத்தம்

இரத்தம் சம்பந்தமான பல பிரச்சனைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பச்சை வாழைப்பழத்தில், இரத்த ஓட்டம் சீராக அமையவும், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும் இந்த பழம் உதவுகிறது.

பற்கள்

பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பற்களுக்கு தேவையான கால்சியம் சத்தினை அளித்து பற்களை உறுதிப்படுத்துகிறது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சிக்கு பின்பு ஒரு சில பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என மருத்துவர்களை ஆலோசனை கூறுவதுண்டு. அந்த வகையில் உடற்பயிற்சிக்கு பின், பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர்.

Recent Posts

நீ அடிச்சா நானும் அடிப்பேன்! மாறி மாறி சதம் விளாசிய இஷான் கிஷன் – ருத்ராஜ்!

டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…

5 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (24/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…

5 hours ago

விடுதலை 2 இப்படி தான் இருந்துச்சு! தனுஷ் சொன்ன விமர்சனம்!

சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…

6 hours ago

ரூ.6 கோடி ஒதுக்கீடு! அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் – அன்பில் மகேஸ்

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…

7 hours ago

பொங்கல் நாளில் நெட் தேர்வு : “வேறு தேதிகளில் நடத்துங்கள்”- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!

சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…

7 hours ago

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்! இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…

8 hours ago