வயிற்றுப்போக்கு உடனடியாக நிற்க சூப்பரான வீட்டு குறிப்புகள்.!

diarrhea (1)

Diarrhea-வயிற்றுப்போக்கு சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்ப பதிவில் காண்போம்..

வயிற்று போக்கு ஏற்பட காரணங்கள்;

சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணிக்காமல் இருப்பது மற்றும் கெட்டுப்போன உணவுகளை எடுத்துக் கொள்வது, பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்களாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஒரு சிலர்  வயிறை நீவி விட்டால் குறைந்து விடும் என்று  நினைக்கிறார்கள் அது சரியான முறை அல்ல. வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரங்களில் உடம்பில் உள்ள நீர்ச்சத்து மற்றும் உப்புச் சத்து வெளியேறிவிடும்.

இதனால் அதிகமாக உடல் சோர்வு ஏற்பட்டு இரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்த கூடும், அதனால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

வயிற்றுப்போக்கு சமயத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்;

அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த ஓ ஆர் எஸ் குடிநீரை எடுத்துக் கொள்ள வேண்டும், இதை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம்.

ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு ஆறு ஸ்பூன் சர்க்கரை கலந்து அந்த தண்ணீரை ஒவ்வொரு முறை வயிற்றுப்போக்குக்கு பிறகும் குடித்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு ஓரளவுக்கு நின்றுவிடும் இதுதான் உயிர் காக்கும் சிகிச்சை முறையாகும்..

மேலும் இந்த சமயங்களில் இளநீர் ,ஜவ்வரிசி கஞ்சி ,பாசிப்பருப்பு கஞ்சி ,சத்துமாவு கஞ்சி, எலுமிச்சை சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு ஆகாரமும் எடுத்துக் கொள்ளாமல் இருக்க கூடாது .

ஒரு சிலர் கழிவுகள் அனைத்தும் வெளியேறட்டும் என்று எதுவுமே எடுத்துக் கொள்ள மாட்டார்கள் அப்படி இருந்தால் உடல் மிக சோர்வடைந்து விடும். இதனை தவிர்க்க இதுபோல் சாப்டான உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சூடான வெறும் சாதத்தில் தயிர் கலந்து எடுத்துக் கொள்ளும் போது வயிற்றுப்போக்கு உடனடியாக நின்று விடும். அது மட்டுமல்லாமல் அவித்த முட்டை எடுத்துக் கொண்டாலும் வயிற்றுப்போக்கு நின்று விடும்.

ஒரு சில வயிற்றுப்போக்கு சமயங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை கூட நிறுத்தி விடுவார்கள் .அவ்வாறு செய்யக்கூடாது தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

அதற்கு மாற்றாக மாட்டுப்பால், ஆட்டுப்பால், எருமை பால் போன்றவற்றை  கொடுக்கக் கூடாது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்;

வசம்பு, கசகசா மற்றும் காரமான உணவுகள், திடமான உணவுகள் ,கொழுப்பு சத்து உள்ள பொருட்கள் இறைச்சி வெண்ணை சேர்க்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிட்டால் உடனடியாக நின்று விடும் ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. இதனால் குடல் இயக்கம் நிறுத்தப்பட்டு உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் அங்கே தங்கிவிடும்.

பொதுவாக வயிற்றுப்போக்கு ஏதேனும் கிருமித் தொற்றால் தான் ஏற்படும் .அதை நாம் தடுத்து நிறுத்தி விட்டால் அது வயிற்றுக்குள்ளே தங்கி பல விளைவுகளை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் மூன்று நாட்கள் மலம் வராமலேயே மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் காய்ச்சலுடன் கூடிய வயிற்றுப்போக்கு ,வாந்தி, கை கால் குளிர்ந்து போவது இந்த சமயங்களில் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்