அடடே .!ஆப்பிளை விட கொய்யா தான் சிறந்ததா ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Published by
K Palaniammal

Guava fruit -கொய்யா பழத்தின் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.

பொதுவாக நம் அனைவரும் உடல்நிலை சரியில்லாத சமயங்களில் தான் பழங்களை உட்கொள்வோம் .ஆனால் அவ்வாறு இல்லாமல்  தினந்தோறும் நாம் காய்கறிகள் எவ்வாறு சாப்பிடுகிறோமோ அதே போல் தினமும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொய்யா பழத்தின் நன்மைகள்:

கொய்யா பழத்தில் ஆரஞ்சில் இருக்கும் விட்டமின் சி யை விட நான்கு மடங்கு அதிகம் உள்ளது. பப்பாளி பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கும். ஆனால் அதைவிட மூன்று மடங்கு கொய்யாப்பழத்தில் உள்ளது. அதேபோல் மாதுளையில் உள்ள புரதச்சத்தை விட இரண்டு மடங்கு கொய்யாவில் உள்ளது.

வாழைப்பழத்தை விட பொட்டாசியம் சத்து கொய்யாவில் தான் உள்ளது .தக்காளியில் இருக்கும் லைகோபினை  விட கொய்யா பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது. மேலும் 100 கிராம் கொய்யாவில் 68 கிராம் கலோரியும் ,நீர்சத்து  81%, நார்ச்சத்து 5.4   உள்ளது.

கொய்யா மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த தீர்வை கொடுக்கும். மேலும் இதில் விட்டமின் ஏ அதிகம் உள்ளது, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதயத்தை வலுவாக்குகிறது மேலும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் உள்ளது.

கொய்யாவில் போலைட் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய பழங்களில் கொய்யாவும் ஒன்று . இந்த போலேட்  சத்து சிசுவின் வளர்ச்சிக்கு தேவையானது.

இதில் லைகோபின் மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் இருப்பதால் மரபணுக்கள்  பாதுகாக்கப்படுகிறது. நம் உடலானது தானே புரதச்சத்தை உருவாக்கிக் கொள்ளும் .அந்த புரதச்சத்தை பாதுகாக்கும் தன்மையும் கொண்டது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழமாக  எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் கொய்யாவில்  கிளைசிமிக் அதிகம் உள்ளது அதனால் காயாக எடுத்துக் கொள்வது சிறந்தது.

மேலும் இதன் இலைகளில் கூட பல மருத்துவ குணங்கள் உள்ளது. கொய்யாவின் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அதை வாய் கொப்பளித்து வர பல் ஈறுகளில் ரத்த  கசிவு ,வீக்கம் போன்றவை குணமாகும். இது ஒரு இயற்கையான மௌத்வாஸாக செயல்படுகிறது.

பக்க விளைவுகள்:

என்னதான் பழங்கள் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுத்தாலும் அதில் 20 சதவிகிதம் பக்க விளைவுகளையும் தரக்கூடியது. இரவில் சாப்பிடுவதால் வயிற்று வலியை ஏற்படுத்தும் . மேலும் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது பித்தத்தை அதிகப்படுத்தும்.

கொய்யாப்பழம் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிக்க கூடாது, இது தொண்டை வலியை உருவாக்கும். அதேபோல் உணவு சாப்பிட்ட பிறகு தான் கொய்யாப்பழம் சாப்பிட வேண்டும். ஆஸ்துமா, வாதம் இருப்பவர்கள் கொய்யாவை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மேலும் சித்த மருந்து மற்றும் நாட்டு மருந்துகள் எடுப்பவர்கள் கொய்யாவை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது மருந்துகளின் வீரியத்தை குறைக்கும். அதனால் நாள்  ஒன்றிற்கு ஒரு கொய்யா விதம் எடுத்துக் கொள்வதன் மூலம் அதன் நன்மைகளை பெற முடியும்

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

7 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

28 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

32 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

46 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

58 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago