இஞ்சியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா! தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!

உணவில் பலருக்கு விருப்பமற்ற பொருளாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்காக சேர்த்துக் கொள்ளப்பட கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று இஞ்சி. இந்த இஞ்சி உட்கொள்வதால் ஏற்படக் கூடிய மருத்துவ நன்மைகள் மற்றும் ஆரோக்கியம் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
இஞ்சியின் மருத்துவ நன்மைகள்
இஞ்சி சாறெடுத்து அதனை பாலில் கலந்து சாப்பிட்டு வரும்பொழுது உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். மார்பு வலி, மலச்சிக்கல், உடல் களைப்பு அதிகம் உள்ளவர்கள் இஞ்சி துவையல் வைத்து சாப்பிட்டு வர குணமடையலாம். மேலும் கப நோய்கள் பித்த நோய்கள் நீங்க இஞ்சியை சுட்டு உடம்பில் தேய்த்து வரவேண்டும். வாதக் கோளாறு உள்ளவர்கள் இஞ்சி சாறில் வெல்லம் கலந்து சாப்பிட்டு வர வாதம் நீங்கி உடல் பலம் பெறும். புதினாவோடு சேர்த்து துவையலாக சாப்பிட்டு வரும்பொழுது பித்தம் அஜீரண கோளாறு வாய் துர்நாற்றம் ஆகியவை நீங்கி உடல் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படும். வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் ஸ்கர்வி நோய்க்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
பசியின்மையால் அவதிப்படுபவர்கள் இஞ்சி சாறில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வரும் பொழுது நல்ல பலன் கிடைக்கும். உடலின் நுண்ணிய பாதைகளை சுத்திகரிக்க உதவுவதுடன், சுவாசப்பிரச்னைகளையும் தீர்க்க உதவுகிறது. மேலும் வயிற்றுப் போக்கு உள்ளவர்களுக்கு இஞ்சியுடன் தேன் விட்டு கிளறி அதில் சற்று நீர் சேர்த்து கொதிக்கவைத்து காலை மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இஞ்சியுடன் வெங்காய சாறு கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். ஆஸ்துமா, இருமல், மூச்சுத் திணறல் ஆகியவற்றையும் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.