காலையில் எழுந்தவுடன் இதெல்லாம் செய்து பாருங்க!
நாம் தினமும் காலையில் எழுந்தவுடன், நம்மை சுத்தம் செய்து கொண்டு, நமது கடமைகளை முடித்துவிட்டு, நம் வேலைகளை பார்க்க செல்கிறோம். ஆனால்,அந்த நாள் முடிவு நமக்கு மன அழுத்தமாக தான் இருக்கும்.
தியானம்
தியானம் என்பது நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இது நமது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதனை தொடர்ந்து நாம் செய்கின்ற வேலைகள் அனைத்துமே, மிகவும் எளிதாக இருக்கும்.
உடற்பயிற்சி
இன்றைய நாகரீகமான உலகில் பல வகையான விதவிதமான நோய்களை மனிதனை தாக்குகிறது. அவைகளில் இருந்து நம்மை காப்பதற்கும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று.
நேரத்திற்கு எழுதல்
நாம் என்றைக்கு காலையில் நேரத்திற்கு எழுந்து நமது வேலைகளை செய்ய தொடங்குகின்றோமோ, அன்றைய நாளில் நாம் செய்யும் வேலைகள் அனைத்துமே உற்சாகமாகவும், உத்வேகத்துடனும் செய்து முடிக்க இயலும்.