Sinus problem -சைனஸ் வருவதற்கான காரணங்களும் மற்றும் நிரந்தர தீர்வுகளை பற்றியும் இப்பதிவில் காணலாம்.
நம் முகத்தில் மூக்குப்பகுதிக்கு அருகிலும் மேல் பகுதியிலும் நான்கு ஜோடி காற்று பைகள் உள்ளது. இதுதான் சைனஸ் பகுதியாகும். இதன் முக்கிய வேலை என்னவென்றால் பேசும்போது நம்முடைய குரலை ஒலிக்கச் செய்யும் .இந்த சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரலில் வித்தியாசம் காணப்படும்.
மேலும் நம் சுவாசிக்கும் காற்றை உடலின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு சூடாக்கி நுரையீரலுக்கு அனுப்பும் பணியையும் செய்கிறது. நம் மூக்கின் உள்பகுதியில் மியூகஸ் என்று சொல்லக்கூடிய சளித்திரவம் சுரக்கும் . இது நம் சுவாசிக்கும் காற்றில் உள்ள கிருமிகள் அந்த மியூகஸ் திரவத்தில் ஒட்டிக் கொள்ளும். இது நாளடைவில் அதிகமாகும் போது சைனஸ் தொந்தரவாக வெளிப்படுகிறது.
சைனஸ் தொந்தரவு ஏற்பட முக்கிய காரணங்கள் இன்ஃபெக்சன் அலர்ஜி ,நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது, பல்லில் இன்ஃபெக்சன் இருப்பது ஆகிய காரணங்களால் சைனஸ் தொந்தரவு ஏற்படும்.
தலைவலி தலைபாரம் சைனஸ் பகுதிகளில் வலி ,முகம் வீங்கி இருப்பது, முகத்தில் வலியுடன் காணப்படுவது, அடுக்குத் தும்மல், ஜலதோஷம் ,அடிக்கடி சளி பிடிப்பது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
ஆவி பிடித்தல்;
சூடான தண்ணீரில் நாளிலிருந்து ஐந்து சொட்டு யூகலிப்டஸ் ஆயிலை சேர்த்து ஆவி பிடித்து வரவேண்டும் தினமும் இவ்வாறு செய்யும்போது மூக்கடைப்பு நீங்கும்,அதுமட்டுமல்லாமல் துளசி இலை ,புதினா இலை,கிராம்பு போன்றவற்றை கொண்டும் ஆவி பிடிக்கலாம் .
ஏனெனில் இவற்றிற்கு இயற்கையாகவே ஆன்ட்டி பாக்டீரியல் பண்பு உள்ளது .இது சுவாச பாதையில் உள்ள கிருமிகளை அழிக்கும்.
நாசல் வாஸ் ;[nasal wash]
வெதுவெதுப்பான தண்ணீர் ஒரு டம்ளர், தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து அந்த தண்ணீரை நெட்டிneti pot என்று சொல்லக்கூடிய கப்பில் ஊற்றி மூக்கின் ஒரு துவாரத்தின் வழியே உப்பு கலந்த அந்த நீரை ஊற்றினால் அது மறு துவாரத்தின் வழியே வெளியேறும் .
இந்த முறை செய்யும்போது நல்ல தீர்வு கிடைக்கும். இதனால் மூக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் வெளியேறிவிடும்.
எண்ணெய் குளியல்;
ஒரு சிலருக்கு உடல் சூட்டின் காரணமாகவும் சைனஸ் ஏற்படும் நல்லெண்ணெயுடன் நொச்சி இலைகளை சேர்த்து காய்ச்சி வடிகட்டி அதை தேய்த்து குளித்து வர வேண்டும் .இதனால் தலையில் நீர் கோர்த்துக் கொள்வது தடுக்கப்படும்.
உணவு முறை;
சைனஸ் தொந்தரவு இருப்பவர்கள் உணவு முறைகளையும் பின்பற்ற வேண்டும் . அதிக குளிர்ச்சி உள்ள உணவுகள் மற்றும் இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். சைனஸ் தொந்தரவு இருக்கும்போது இவற்றை எடுத்துக் கொண்டால் மேலும் அதிகப்படுத்தும்.
மேலும் பால் சார்ந்த உணவுகளான தயிர், மோர் போன்றவற்றையும் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
எனவே சைனஸ் இருப்பவர்கள் இந்த முறைகளை கடைப்பிடித்து சைனஸ் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் .
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…