சைனஸ் பிரச்சனைக்கு கிடைச்சாச்சு.. நிரந்தர தீர்வு..

sinus

Sinus problem -சைனஸ் வருவதற்கான காரணங்களும் மற்றும் நிரந்தர தீர்வுகளை பற்றியும் இப்பதிவில் காணலாம்.

நம் முகத்தில் மூக்குப்பகுதிக்கு அருகிலும் மேல் பகுதியிலும் நான்கு ஜோடி காற்று பைகள் உள்ளது. இதுதான் சைனஸ் பகுதியாகும். இதன் முக்கிய வேலை என்னவென்றால் பேசும்போது நம்முடைய குரலை ஒலிக்கச் செய்யும் .இந்த சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரலில் வித்தியாசம் காணப்படும்.

மேலும் நம் சுவாசிக்கும் காற்றை உடலின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு சூடாக்கி நுரையீரலுக்கு அனுப்பும் பணியையும் செய்கிறது. நம் மூக்கின் உள்பகுதியில் மியூகஸ்  என்று சொல்லக்கூடிய சளித்திரவம்  சுரக்கும் . இது நம் சுவாசிக்கும் காற்றில் உள்ள கிருமிகள் அந்த மியூகஸ்  திரவத்தில் ஒட்டிக் கொள்ளும். இது நாளடைவில் அதிகமாகும் போது சைனஸ் தொந்தரவாக வெளிப்படுகிறது.

காரணங்கள்;

சைனஸ் தொந்தரவு ஏற்பட முக்கிய காரணங்கள் இன்ஃபெக்சன் அலர்ஜி ,நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது, பல்லில் இன்ஃபெக்சன் இருப்பது ஆகிய காரணங்களால் சைனஸ் தொந்தரவு ஏற்படும்.

அறிகுறிகள்;

தலைவலி தலைபாரம் சைனஸ் பகுதிகளில் வலி ,முகம் வீங்கி இருப்பது, முகத்தில் வலியுடன் காணப்படுவது, அடுக்குத் தும்மல், ஜலதோஷம் ,அடிக்கடி சளி பிடிப்பது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

சைனசை விரட்டி அடிக்கும் எளிமையான வீட்டு வைத்தியங்கள்;

ஆவி பிடித்தல்;

சூடான தண்ணீரில் நாளிலிருந்து ஐந்து சொட்டு யூகலிப்டஸ் ஆயிலை சேர்த்து ஆவி பிடித்து வரவேண்டும் தினமும் இவ்வாறு செய்யும்போது மூக்கடைப்பு நீங்கும்,அதுமட்டுமல்லாமல் துளசி இலை ,புதினா  இலை,கிராம்பு போன்றவற்றை கொண்டும் ஆவி பிடிக்கலாம் .

ஏனெனில் இவற்றிற்கு இயற்கையாகவே  ஆன்ட்டி பாக்டீரியல் பண்பு  உள்ளது .இது சுவாச பாதையில் உள்ள கிருமிகளை அழிக்கும்.

நாசல்  வாஸ் ;[nasal wash]

வெதுவெதுப்பான தண்ணீர் ஒரு டம்ளர், தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து அந்த தண்ணீரை நெட்டிneti pot என்று சொல்லக்கூடிய கப்பில் ஊற்றி மூக்கின் ஒரு துவாரத்தின் வழியே உப்பு கலந்த  அந்த நீரை ஊற்றினால் அது மறு துவாரத்தின் வழியே வெளியேறும் .

இந்த முறை செய்யும்போது நல்ல தீர்வு கிடைக்கும். இதனால் மூக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் வெளியேறிவிடும்.

எண்ணெய் குளியல்;

ஒரு சிலருக்கு உடல் சூட்டின் காரணமாகவும் சைனஸ் ஏற்படும் நல்லெண்ணெயுடன் நொச்சி இலைகளை சேர்த்து காய்ச்சி வடிகட்டி அதை தேய்த்து குளித்து வர வேண்டும் .இதனால் தலையில் நீர் கோர்த்துக் கொள்வது தடுக்கப்படும்.

உணவு முறை;

சைனஸ் தொந்தரவு இருப்பவர்கள் உணவு முறைகளையும் பின்பற்ற வேண்டும் . அதிக குளிர்ச்சி உள்ள உணவுகள் மற்றும் இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். சைனஸ் தொந்தரவு இருக்கும்போது இவற்றை எடுத்துக் கொண்டால்  மேலும் அதிகப்படுத்தும்.

மேலும் பால் சார்ந்த உணவுகளான தயிர், மோர் போன்றவற்றையும் உடலுக்கு குளிர்ச்சியை  தரக்கூடிய உணவுகளை  தவிர்க்க வேண்டும்.

எனவே சைனஸ் இருப்பவர்கள் இந்த முறைகளை கடைப்பிடித்து சைனஸ் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்