தினம் ஒரு கிவி பழம் சாப்பிட்டால் என்னவாகும்? விட்டமின் சி முதல் இதய ஆரோக்கியம் வரை!!
கிவி பழம் : பசலிப்பழம் என்றழைக்கப்படும் ‘கிவி பழம்’ பலவிதமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது, குறிப்பாக அதிக அளவிலான விட்டமின் சி, ஈ, கே மற்றும் பொட்டாசியம். இந்த ஊட்டச்சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகின்றன. இதனை சைனீஸ் நெல்லிக்காய் (யாங் டாவோ) என்றும் அழைக்கப்படுகின்றன.
கிவி பழம் சீனாவில் குழந்தைகளுக்கும், புதியதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. கிவி பழத்தின் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், தினம் நாம் உண்ணும் நொறுக்கு தீவனம் மற்றும் துரித உணவுகளுக்கு பணத்தை செலவழிப்பதை விட அதீத சாது நிறைந்த இப்பழத்தை வாங்கி உண்ணலாம்.
கிவி பழத்தை தோலுடன் சாப்பிடலாம் அல்லது தோல் நீக்கி நேரடியாக சாப்பிடலாம். இல்லையென்றால், பழச்சாலட் அல்லது காய்கறி சாலட்டில் சேர்த்து உண்ணலாம். வித்தியசமாக வேண்டுமேன்றால், கிவி பழத்தை மற்ற பழங்களுடன் சேர்த்து ஸ்மூதியாக மாற்றி குடிக்கலாம்.
தினம் ஒரு கிவி பழம் சாப்பிட்டால் என்னென்ன நண்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க…
வைட்டமின் சி
கிவி பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும், தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும், மற்றும் சரும சுறுசுறுப்பை உருவாக்க உதவும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
கிவியில் வைட்டமின் சி தவிர, வைட்டமின் ஈ மற்றும் பாலிபினால்கள் போன்ற பிற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது உடலின் ஆக்ஸிடன்ட் அழுத்தம் மற்றும் ஸ்ரீ ராடிக்கல் சேதத்தை தடுக்க உதவுகிறது.
செரிமானம்
கிவியில் ஆக்டினிடின் என்ற நொதி உள்ளது, இது புரதங்களை உடைக்க உதவுகிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. இது மட்டுமின்றி, இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது.
இதய ஆரோக்கியதிற்கு
கிவியில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. பொட்டாசியம் உடலின் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது, அதே நேரத்தில் நார்ச்சத்து கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியதிற்கு
கிவி பழத்தில் உள்ள விட்டமின் சி மற்றும் ஈ ஆகியவை சரும சுறுசுறுப்பை உருவாக்கவும், சருமத்தை காக்கவும் உதவுகின்றன. இது சருமத்தை இளமையுடன் மற்றும் புத்துணர்ச்சியுடனும் வைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
கிவி பழத்தின் அதிக அளவிலான விட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது உடல் தொற்று மற்றும் நோய்களை மிகவும் திறம்பட எதிர்த்துப் போராட உதவுகிறது.
எடை குறைப்பு
கிவி பழம் குறைந்த கலோரிளை மட்டுமே கொண்டுள்ளது, ஆனால் அதிக நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது. இது நீண்ட நேரம் பசியை குறைக்க உதவும், எனவே கலோரி எடையை குறைக்க உதவுகிறது.
மொத்தத்தில் தினமும் கிவி பழத்தை சேர்ப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.