வெந்தயம் என்பது ஒரு மூலிகை பொருளாகும். இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும், விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தய குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப்பொருள்களாக பயப்படுகிறது.
சத்துக்கள் :
இது சமையலுக்கு மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. வெந்தயத்தில் புரதம், கொழுப்பு சத்து. சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, சோடியம், உயிர் சத்துக்கள், நிக்கோடினிக் அமிலம், கயொலின் உட்பட இன்னும் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது.
மாரடைப்பு :
வெந்தயம் கொலஸ்ட்ராலை குறைக்க உதவி செய்கிறது. முக்கியமாக கொழுப்புப்புரதத்தை குறைக்க உதவுகிறது. இதய நோய்க்கு வெந்தயம் ஒரு சிறந்த மருந்து. வெந்தயத்தில் உள்ள நார்சத்து இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும். இதில் பொட்டாசியம் உள்ளதால், இதயத் துடிப்பு மற்றும் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது.
தாய்ப்பால் :
வெந்தயம் சீதக்கழிச்சல், உடல் எரிச்சல், தாகம், இளைப்பு நோய் போன்ற நோய்களை நீக்குகிறது. அது மட்டுமல்லாமல், வெந்தயம் கல்லீரல் நோய்களை நீக்கும்.தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக வெந்தயம் தேவை. அதிலுள்ள டையோஸ்ஜெனின் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க செய்கிறது.
காச நோய் :
வெந்தயக்கீரை ஜீரண சக்தியை செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பாரவைக்கோளாறுகளை சரி செய்கின்றது. வெந்தயக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காச நோய் நீங்கும்.
வயிற்று பிரச்சனைகள் :
வெந்தயக் கீரை வயிற்று நோய்களை குணப்படுத்துகிறது. வெந்தயக் கீரையை வேகா வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். இதனால் உடல் சுத்தமாகும். அத்துடன் வெந்தயக்கீரையை உண்டால் குடல் புண்களும் குணமாகும். வெந்தயக்கீரையை வெண்ணெய்யிட்டு வதக்கி உண்டால், பித்தக்க கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுபடும்.
குடல் புண் :
வெந்தயக்கீரையை அரைத்து நெய்யுடன் சேர்த்து உண்டு வந்தால் தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும். மேலும் மூளை நோய், குடல் புண் போன்ற நோய்களுக்கு இந்த கீரை சிறந்த மருந்து ஆகும். இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
சர்க்கரை நோய் :
வெந்தயக் கீரையை அரைத்து சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இது பசியை தூண்டும் தன்மை கொண்டது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…