உடல் பருமனை குறைக்க உதவும் அற்புதமான வழிகள்….!!!

Published by
லீனா
  • உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகள்.
  • நமது ஆரோக்கியமான உணவு பழக்ககங்களை மறந்து மேலை நாட்டு உணவு முறைகளான பாஸ்ட் புட் உணவுகளை பயன்படுத்துவது.

இன்றைய உலகில் அனைவரையும் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு. இதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்ளுகின்றனர். இதற்காக பல லட்சங்களை செலவழிக்கின்றனர்.

Image result for உடல் பருமனை

உடல் எடை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணமே நாம் தான். ஏனென்றால், நாம் நமது ஆரோக்கியமான உணவு பழக்ககங்களை மறந்து மேலை நாட்டு உணவு முறைகளான பாஸ்ட் புட் போன்ற உணவுகளை சாப்பிடுவது தான் இதற்கு காரணம்.

சர்க்கரை

உடல் எடை அதிகரிப்பதற்கு சர்க்கரையும் ஒரு காரணம் தான். நாம் நமது உணவுகளில் அளவுக்கதிகமான சர்க்கரை சேர்ப்பதை குறைத்து, அளவோடு பயன்படுத்தும் போது உடல் எடை அதிகரிப்பதில் இருந்து விடுதலை பெறலாம்.

எலுமிச்சை சாறு

உடல் எடையை குறைப்பதில் எலுமிச்சை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தினந்தோறும் காலையில், எழுந்தவுடன், வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கேட்ட கொழுப்புகள் கரைந்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

உணவு கட்டுப்பாடு

உணவு சாப்பிடும் போது நாம் நமது சாப்பாட்டில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். சாப்பிடும் போது, மொபைல் பயன்படுத்தி கொண்டோ அல்லது டிவி பார்த்துக் கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த பழக்கவழக்கங்களும் நமது உடல் எடையை அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கிறது.

ஏசி வாகனங்கள்

நமது அன்றாட வாழ்வில் பல இடங்களுக்கு பயணம் செய்கிறோம். இன்றைய நாகரீகம் வளர்ந்த காலத்தில், வெளியில் செல்பவர்கள் எல்லாம் ஏசி கார், பஸ் என பயணம் செய்து நமது உடலில் உள்ள வியர்வை வெளியாகாமல் , அது உடலிலேயே தங்கி உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.

எனவே, இப்படிப்பட்ட பயணங்களை தவிர்த்தால் உடல் எடை குறையும். கடைகளில் மாடிப்படிகளை பயன்படுத்துவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

நாம் காலை மற்றும் இரவு வேளைகளில் சீஸ், பட்டர் போன்ற உணவுகளை பயன்படுத்துவதை தவிர்த்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

 

எண்ணெய் உணவுகள்

நமது அன்றாட வாழ்வில் உணவு என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. நாம் உண்ணும் உணவில் கட்டுப்பாடு இல்லாத போது உடல் எடை அதிகரிக்கிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்தினால், உடல் தானாக குறைந்து விடும்.

 

தண்ணீர்

தண்ணீர் என்பது நமது உடலுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு மனிதனின் உடலுக்கு, ஒரு நாளைக்கு மூன்று லீட்டர் தண்ணீர் அவசியம். தினந்தோறும் நமது உடலுக்கு தேவையான அளவு நீரை அருந்தி  வந்தாலே உடல் பருமன் அதிகரிப்பது தவிர்க்கப்படுகிறது.

நடைப்பயிற்சி

தினமும் காலையில் எழுந்தவுடன் நாம் பல உடற்பயிற்சிகளை செய்கிறோம். இந்த எல்லா உடல் பயிற்சிகளையும் விட நடைப்பயிற்சி நமது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது உடலில் உள்ள கெட்ட நீர்கள் வெளியேறி, உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

 

 

Recent Posts

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…

6 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : ரோஹித் தலைமையில் இந்திய அணி…பிசிசிஐ அறிவிப்பு!

மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி  கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…

18 minutes ago

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு : சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…

34 minutes ago

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ‘இவர்’ தான்! அடித்து கூறும் நெட்டிசன்கள்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…

44 minutes ago

களைகட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! களத்திற்கு தயாரான திமுக vs நாதக!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனுக்கள்…

1 hour ago

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு? த.வெ.க பொருளாளர் சொல்வேதென்ன?

காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…

1 hour ago