உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும் சீரகத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்!
நமது அன்றாட வாழ்வில் பல வகையான பொருட்களை பயன்படுத்துகிறோம். நமது சமையல்களில் சீரகம் என்பது மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. நாம் உண்ணுகிற பெருபான்மையான உணவுகளில், சீரகம் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது இந்த பதிவில், சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பாப்போம்.
கண்பார்வை
கண் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குவதில் சீரகம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தினமும் நமது உணவில் சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும். அல்லது சீரக தண்ணீரை குடித்தால், கண் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.
செரிமானம்
செரிமான பிரச்னை உள்ளவர்கள், தினமும் உணவு உண்ட பின் சீரக தண்ணீர் குடிக்கலாம் அல்லது சிறிதளவு சீரகத்தை சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
உடல் குளிர்ச்சி
சிலருக்கு எந்நேரமும் உடல் வெப்பமாக தான் இருக்கும். இதனால் பல நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இப்படிப்பட்டவர்கள், உடலை குளிர்ச்சியாக்க தினமும் சீரக தண்ணீர் குடிப்பது நல்லது.
மயக்கம்
தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்னை உள்ளவர்கள், சீரகதநீரை குடித்தால் உடனடியாக சரியாகிவிடும்.
உடல் எடை
இன்றைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே, உடல் எடை அதிகரிப்பு தான். இப்பிரச்சனை உள்ளவர்கள், மஞ்சள் வாழைப்பழத்துடன், சிறிதளவு சீரகம் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறைந்துவிடும்.