மருதாணி இலையை பற்றி இதுவரை அறிந்திராத மகத்துவமான நன்மைகள்
- மருதாணி இலையில் உள்ள நன்மைகளும், அதனால் குணமாகும் நோய்களும்.
மருதாணி இலை நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு இலை. இந்த மரம் அதிகமானோர் வீடுகளில் வளர்க்கப்படக் கூடிய மறவகைகளில் ஒன்று. இந்த மரத்தின் இலைகள் நமது கைகளை அலங்கரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
அந்தக் காலத்தில். மருதாணி இலைகள் அழகுக்காக மட்டுமே அல்லாமல், உடல்நலம் காக்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தி உள்ளனர்.
அழகுக்காக மட்டுமல்ல
மருதாணியை இலையை பெண்கள் அழகுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் அதி மிகவும் தவறானது. மருதாணி இலையில், கிருமிகளை கொள்ளக் கூடிய ஆற்றல் கூடாது. இது ஒரு சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. நகங்களில் ஏற்படும் நகசுத்தி வரமல் தடுக்கிறது.
தொண்டை
தொண்டை சம்பந்தமான நோய்களில் இருந்து இந்த இலை பூரண சுகம் கொடுக்கிறது. மருதாணி இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும்.
தலைமுடி
இன்றைய இளைய தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே தலைமுடி பிரச்னை தான். மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.
மேலும், மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
தொழுநோய்
தொழுநோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். மருதாணி இலையை மருதாணி பூக்களையும், இளந்தளிர்களையும் பறித்து சாறு பிழிந்து அரைத் தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய் மேலும் பரவாமல் தடுக்கிறது.
பெண்களுக்கான பிரச்சனை
பெண்களுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு, இது நிரந்தர தீர்வை அளிக்கிறது. சில பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு, வெள்ளைப்பாடு ஆகியவை குணமாக, மருதாணி இலையை அரைத்தநெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து இருவேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டால் இப்படிப்பட்ட நோய்களில் இருந்து விடுதலை பெறலாம்.