இன்றைய காலகட்டத்தில் அதிகமானோர் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கபடுகின்றனர். மனிதனின் உடல் நலத்தை பிரதிபலிக்கும் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. இந்த பாதிப்புக்கு “வருமுன் காப்பதே சிறந்தது” என சிறுநீரகவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரக செயல் இழப்பு என்பதைத் தற்காலிகமாக சிறுநீரகம் செயல் இழத்தல், நிரந்தரமாக சிறுநீரகம் செயல் இழத்தல் என இரண்டு வகையாகப் பிரித்து கொள்ளலாம். இந்த சிறுநீரக பாதிப்பு சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கிறது.
சிறுநீரகங்களில் உண்டாகும் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக அழற்சி, சிறுநீர் பாதையில் கற்கள் உருவாதல் போன்றவை தற்காலிகமாக சிறுநீரகம் செயல் இழத்தல் வகையில் இடம் பெறும். சிறுநீரகங்கள் தற்காலிகமாக செயல் இழக்கும்போது, பலவிதமான ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, சீதபேதி, வாந்தி, கருவுற்ற பெண்களுக்கு அதிகளவில் ரத்தம் வெளியேறுதல், எலி காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் உட்பட ஏராளமான பிரச்சனைகள் தோன்றும்.
சர்க்கரை நோய், பல நாட்களாக சிறுநீரில் புரதச்சத்து வெளியேறுதல் போன்றவைதான் சிறுநீரகங்கள் நிரந்தரமாக செயல்படாமல் போவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
நமது உடலில் உள்ள நீர்ச்சத்தில் காணப்படுகிற தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் வேலையைச் செய்வது சிறுநீரகம் தான். இது பழுது அடைய தொடங்கும்போது, அளவுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறும் அல்லது தேவையான அளவிற்கு வெளியேறாமல் Urinary Blader-ல் தங்கிவிடும். ஒரு சிலர் கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். சிறுவர், சிறுமியராக இருந்தால், தூங்கும் நேரங்களில் படுக்கையை நனைத்து விடுவார்கள். மேலும் சிறுநீரக பாதிப்பால் பல பிரச்சனைகள் ஏற்பட கூடும்.
திடகாத்திரமான உடல்நலம் கொண்டு இருந்தாலும் வருடம் ஒரு முறை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வதன் மூலமாக சிறுநீரகம் சிறிதாக உள்ளதா, பெரிதாக வீங்கி உள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம்.
சிறுநீரகம் செயல் இழப்பைக் குணப்படுத்தவும், அதனால் ஏற்படுகிற மற்ற பாதிப்புக்களை சரி செய்யவும் தற்போது நவீன சிகிச்சைகள் நிறைய உள்ளன. நோயாளியின் உடல்நலத்தைப் பொறுத்தும், நோயின் தீவிரத்தைப் பொறுத்தும் சிகிச்சைகள் அமைகின்றது. சிறுநீர்த்தொற்று இருந்தால் ஆன்டிபயாட்டிக் கொடுத்து நுண்கிருமிகளை அழிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…