நீரிழிவு நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாவல் பழம்!
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை பயன்படுத்துகிறோம். பழங்கள் அனைத்துமே சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருமே விரும்பி உண்ணக் கூடிய ஒன்று தான்.
பழங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள பல்வேறு நோய்களை குணப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தற்போது நாம் இந்த பதிவில், நாவல்பழத்தில் உள்ள நன்மைகள் பற்றி பாப்போம்.
நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.
இதயம்
இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் நாவல்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது இதயத்தின் இரத்த ஓட்டத்தை சீராக்கி மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
சிறுநீரக பிரச்சனை
சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு நாவல்பழம் ஒரு சிறந்த மருந்தாகும். சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை உள்ளவர்கள், தொடர்ந்து நாவல்பழம் சாப்பிட்டு வந்தால், இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக சிறுநீரக கற்கள் பிரச்னை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
நீரிழிவு
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய் தான். இதனை கட்டுப்படுத்துவதற்கு இயற்கையான முறையில் மருத்துவம் மேற்கொள்வது தான் சிறந்தது.
அந்த வகையில், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, நாவல்பழம் ஒரு சிறந்த மருந்தாகும். நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டை தடுத்து, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
குடற்புண்
குடற்புண் பிரச்னை உள்ளவர்களுக்கு நாவல்பழம் ஒரு சிறந்த மருந்தாகும். குடற்புண் பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து நாவல்பழம் சாப்பிட்டு வந்தால், இப்பிரச்னையில் இருந்து விடுதலை பெறலாம்.