தினமும் அத்திப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா.?
அத்திப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் :
அதிக சத்துக்கள் மிகுந்த பழங்களில் அத்திப்பழம் சிறந்த ஒன்றாகும்.இந்த பழத்தில் புரோட்டின் ,சர்க்கரை சத்து ,கால்சியம் ,பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து நிறைந்து காணப்படுகிறது.மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நான்கு மடங்கு அதிகமாக காணப்படுகிறது.
இந்த வகையில் தினமும் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பின்வருமாறு காண்போம்.
- அத்திப்பழத்தின் காய்களில் உள்ள பாலை வாய் புண் இருந்து தடவினால் வாய் புண் விரைவில் சரியாகிவிடும்.
- அத்திப்பழம் சாப்பிடுவதால் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல் மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புக்களை சுறுசுறுப்புடன் செயலாற்ற வைக்கிறது.
- தினமும் இரண்டு அத்திப்பழத்தை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல், வளர்ச்சி அடைவதுடன் பருமனடையும்.
- நாள்பட்ட மலச்சிக்கலை தீர்க்க 5 அத்திப்பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.மலச்சிக்கலை தீர்க்க உணவிற்கு பிறகு சிறிதளவு அத்திப்பழ விதைகளை சாப்பிடலாம்.
- தினமும் அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடம்பில் ஏற்படும் புண்கள்,குஷ்டம் ,தோலின் நிறமாற்றம் போன்ற நோய்கள் குணமாகும்.