உடல் எடையை குறைக்க கொண்டைக்கடலையை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள் !
உடல் எடை அதிகரிப்பினால் இன்றைய தலை முறையினர் பெரிதும் பாதிக்க படுகிறார்கள். இந்த பிரச்சனையை தற்போது கொண்டைக்கடலையை பயன்படுத்தி எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
கொண்டக்கடலை :
கொண்டைக்கடலையில் நமது உடலுக்கு தேவையான பல விதமான சத்துக்களும் அடங்கியுள்ளது. கொண்டக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்களும் இதில் அதிகம் காணப்படுகிறது.
இந்த கொண்டைக்கடலையை நாம் காலை மற்றும் இரவில் எடுத்து கொண்டாலும் நமக்கு பல விதமான நன்மைகளை கொடுக்கிறது.இது உடல் எடையையும் குறைக்க பயன்படுகிறது.
தேவையான பொருட்கள் :
கொண்டக்கடலை -1கப்
தக்காளி -1
வெங்காயம் -1
கொத்தமல்லி -சிறிதளவு
கேரட் -1 துருவியது
உப்பு -தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு -1ஸ்பூன்
செய்முறை :
கொண்டைக்கடலையை முதலில் 8 மணி நேரம் ஊற வைத்து பின்பு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தக்காளி ,வெங்காயம் ,கொத்த மல்லி ஆகியவற்றை நறுக்கி சேர்த்து கொள்ளவும். அதனுடன் கொண்டக்கடலை மற்றும் உப்பு ,எலுமிச்சை சாறு சேர்ந்து நன்கு கிளறவும்.
இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாகும்.இந்த உணவை நாம் அவர்களுக்கும் செய்து கொடுக்கலாம்.