நாம் அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை உண்கிறோம். அனைத்து பழங்களும் நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆரோக்கியத்தை அளிக்கிறது.
பழங்கள் நமது உடலில் உள்ள நோய்களை இயற்கையான முறையில் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்களை சாறாக குடிப்பதை விட மென்று சாப்பிடுவது நல்லது.
துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம், இனிப்பு சுவை உடையது. இதன் பழம் மட்டுமன்றி, இலைகளும் மருத்துவ குணம் கொண்டது.
துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புசத்து, கார்போஹைட்ரேட், நார்சத்து, துத்தநாகம்,புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளது. வாழைப்பழத்தை விட 10 மடங்கு அதிகமான இரும்புசத்து இந்த பழத்தில் உள்ளது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். மது, போதை போன்ற தீய பழக்கத்தால் உடல் வலுவிழந்தவர்களுக்கு இந்த பலம் நல்ல மருந்து.
பெண்களுக்கு ஏற்படும் கருப்பை பிரச்சனைகளுக்கு இந்த பழம் நல்ல மருந்தாக பயன்படுகிறது.
கருப்பை பலவீனம், கரு களைதல், இத்தகைய பிரச்சனை உள்ள பெண்கள் துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால் கருப்பை பலப்படும்.
சிலருக்கு பசியுணர்வே இல்லாத நிலை காணப்படும். இதனால் பல நோய்கள் ஏற்பட கூடும். இந்த துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியை தூண்டி பசியை ஏற்படுத்தும்.
ஒற்றை தலைவலி வந்தால் நாம் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. ஒற்றை தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும். இந்த பழத்தில் ஒற்றை தலைவலியை போக்க கூடிய ரிபோபிளேவின் சத்து அதிகமாக உள்ளது.
சிலர் மிகச் சிறிய வயதிலேயே மிகவும் வயது முதிந்தவர்கள் போல காணப்படுவார்கள். துரியன் பழம் முதுமை தோற்றத்தை தடுத்து, இளமை தோற்றத்தை பிரதிபலிக்க செய்கிறது.
இந்த பழத்தில் முதுமை தோற்றத்தை தடுக்க கூடிய வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக உள்ளது.
இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பழம் நல்ல தீர்வை அளிக்கிறது. இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள் இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…