நமது அன்றாட வாழ்வில் உணவு என்பது ஒருஇன்றியமையாத பிடித்துள்ளது. நாம் உண்ணும் உணவை பொறுத்து தான் நமது உடல் ஆரோக்கியமும் அமைகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த உணவுகளை உண்பது நமது கடமை.
நாமும், நம் உடல் ஆரோக்கியமும் ஒழுங்காக இருந்தால் தான், நாம் எந்த வேலைகளையும் முழு ஈடுபாடுடன் முடியும். நம்மில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இனிப்பு வகை உணவுகளை விரும்பி உண்பதுண்டு.
கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களில் உலர் திராட்சை மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதில் உலர் திராட்சையில் உள்ள முக்கியமான பயன்கள் பற்றி பாப்போம்.
உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு உலர் திராட்சை ஒரு சிறந்த உணவாகும். இதில் உள்ள சத்துக்கள் உடல் எடை அதிகரிப்பில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் உலர் திராட்சையை தேன் அல்லது நெய்யோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
இன்றைய இயந்திரமயமான உலகில் மன அழுத்தம் என்பது, 1-ம் வகுப்பு பயிலும் சிறுவர்களுக்கு கூட உள்ளது. அவர்களை பொறுத்தவரையில், படிப்பை குறித்த மனா அழுத்தம், பெரியவர்களுக்கு, தொழில் செய்யும் இடங்களிலும், வீட்டில் உள்ள பிரச்சினைகளாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை என்கின்ற அளவுக்கு அதிகமானோர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் இரவில் தூங்குவதற்கு முன்பு, காய்ந்த திராட்சைகளை பாலில் ஊறவைத்து அருந்தி வர கூடிய விரைவில் மன அழுத்தங்கள் குறைந்து, ரிலாக்ஸ் ஆகலாம்.
சிலருக்கு மிக சிறிய வயதிலேயே பல் விழுதல் மற்றும் பல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் உலர் திராட்சை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. உடலில் சில அத்தியாவசிய சத்துக்கள் குறைவதால் பல் உடைதல், பல் ஈறுகளில் வீக்கம், மற்றும் ரத்தக்கசிவு போன்றவை ஏற்படுகின்றன.
உலர் திராட்சையில், கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால், பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மிக எளிதாக தீர்க்கலாம்.
உலர் திராட்சையில் சிறுநீரகம் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளை நோய்களை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரக பிரச்னை, அதிலும் பலர் சிறுநீரக கற்கள் உருவாகும் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.
காய்ந்த திராட்சைகள் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி, சிறுநீரக கற்களை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காய்ந்த திராட்சை செரிமான பிரச்சனைகளை நீக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் செரிமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
மேலும், இது வயிற்று சம்பந்தமான பல பிரச்சனைகளை தீர்ப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
கண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதில் காய்ந்த திராட்சை மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. ஏனென்றால் காய்ந்த திராட்சையில் அதிகமான வைட்டமின் சத்துக்கள் உள்ளது. எனவே கண்கள் சம்பந்தமான பல பிரச்சனைகளை நீக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…