அதிகம் டீ குடிப்பதால் பற்களில் உள்ள வெண்மை நிறத்தை இழக்கிறோம்!
உலக முழுவதும் உள்ள அனைவரும் தூங்கி எழுந்தவுடன் நம் மனத்திற்கு முதலில் வருவது டீ அல்லது காபி குடிக்க வேண்டும் என தோன்றும்.சிலர் பல் கூட விலகாமல் டீ அல்லது காபி குடிப்பதை வழக்கமாக வைத்து வருகின்றனர். காரணம் டீ அல்லது காபி மீது அதிக ஆர்வத்தை காட்டுவார்கள்.
இந்நிலையில் இவை குடிப்பதன் மூலம் ஏற்படும் சில நன்மைகள் மற்றும் தீமைகளை பார்க்கலாம்.
பிரிட்டனில் உள்ள சர்ரே பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிகம் காபி குடிப்பவர்கள் இரவு நேரத்தில் தூக்கத்தில் பல பிரச்சனைகளை எதிர் கொள்வதாகவும் ,அதிகம் டீ குடிப்பவர்கள் இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தை பெறுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பற்களில் உள்ள வெண்மை நிறத்தை டீ மற்றும் காபி இரண்டிலும் உள்ள மூலப்பொருள்கள் வெண்மையை பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.அதில் அதிகமாக டீ மூலமாகத்தான் பற்களில் உள்ள வெண்மை நிறத்தை இழப்பதாக கூறப்படுகிறது.
டீ மற்றும் காபி குடிப்பவர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.அதாவது இவர்களில் யார் சிக்கலான சூழ்நிலையில் மனதை ஒருநிலைப்படுத்துதல் வல்லவராக உள்ளார் என என்ற ஆய்வு நடத்தப்பட்டது.அதில் டீ குடிப்பவர்கள் தான் வல்லவராக திகழ்கின்றனர்.
இதயத்திற்கு நல்லது டீயா? காபியா? என்று பார்க்கும் போது இரண்டுமே உடலுக்கு நல்லது ஆனால் இதயத்திற்கு இதமானது காபி தான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.