அடிவயிற்றில் இருக்கும் தொப்பையை குறைக்க இந்த ஜூஸை குடிச்சாலே போதும் ! தொப்பை காணாமலே போய்விடும் !
இன்றைய தலைமுறையினர் பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன் அதனால் வரக்கூடிய தொப்பை. இது பலரையும் பாதிக்கும் முக்கிய பிரச்சனை இதனால் ஆண்கள் மற்றும் பெண்கள் மிகவும் பாதிக்க படுகிறார்கள்.
தொப்பை இருந்தால் குனிந்து நிமிர்ந்து ஒரு வேலை கூட செய்ய இயலாது. இதனால் பல விதமான நோய்களும் நம்மை எளிதில் தாக்கி விடும்.வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்து நாம் எவ்வாறு தொப்பையை கரைக்கலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
வெள்ளரிக்காய் :
வெள்ளரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்தும் நீர் சத்தும், இருப்பதால் இது நமது உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கொத்த மல்லி:
கொத்த மல்லியில் இருக்கும் வைட்டமின் ஏ ,சி மற்றும் அயர்ன் சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் அது இரத்த சோகை நோய்க்கு மிக சிறந்த தீர்வாக அமைகிறது. மேலும் இது நமது உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது.
எலுமிச்சை சாறு :
எலுமிச்சை நமது உடலில் இருக்க கூடிய கொழுப்புக்களை கரைக்கும் தன்மையுடையது.
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் – 1
இஞ்சி -சிறிய துண்டு
கொத்த மல்லி -கைப்பிடி
எலுமிச்சை சாறு -1 ஸ்பூன்
செய்முறை :
முதலில் வெள்ளரிக்காய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி ,கொத்த மல்லி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் முதலில் அரைத்து கொள்ளவும். பின்பு பாதி டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்த ஜூஸை ஒரு டம்ளரில் ஊற்றி வடிகட்டியை வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
குறிப்பு :
இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறைவதோடு அடி வயிற்றில் இருக்கும் தொப்பையை குறைக்கும்.