இந்த பூவில் டீ குடித்து வந்தால் ஆஸ்துமா நோய் வரவே வராதாம் !

Default Image

முல்லீன் எனப்படும் இந்த செடி ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இது நமது உடலில் ஏற்படும் சுவாசப்பாதை கோளாறுகள் மற்றும் தொண்டை எரிச்சல், தொண்டை புண் மற்றும் பலவிதமான நோய்களை போக்குவதில் இந்த செடியின் இலை, கனி ,காய் என அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் இந்த செடியின் இலைகளை மேற்பூச்சாக பூசி வருகையில் நாள்பட்ட அரிப்புக்கள் குணமாகும்.

இதயத்தை பாதுகாக்கிறது :

 

முல்லீன் எனப்படும் இந்த தாவரம் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள பேருதவி புரிகிறது. இதயத்தில் உள்ள இரத்த குழாய்யின் அடைப்புகளை சரி செய்ய பயன்படுகிறது.

தலைவலி :

 

முல்லின் எனப்படும் இந்த தாவரத்தை நாம் டீ போட்டு குடித்து வர தலைவலி குணமாகும்.

சுவாச மண்டலம் :

முல்லீன் சுவாச மண்டலத்தில் ஏற்படும் அடைப்புகள் நீக்கி சுவாச பிரச்சனைகளை தீர்ப்பதில் பேருதவி புரிகிறது. மேலும் இது ஆஸ்துமா முதலிய நோய்களை குணப்படுத்தவும் உதவி புரிகிறது.

மூலநோய் :

மூல நோயை குணப்படுத்துவதிலும் முல்லீன் தாவரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

முல்லீன் டீ தயாரிக்கும் முறை:

தேவையான பொருள்கள் :

முல்லீன் இலைகள் ,பூக்கள் -1,2 ஸ்பூன்

தேன் – தேவைக்கேற்ப

தண்ணீர் -1 கப்

செய்முறை :

முல்லீன் இலைகளை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின்பு வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்..இப்போது ஆரோக்கியமான முல்லீன் டீ ரெடி.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்