பொதுவாக நாம் எப்போதுமே நமது முகத்தின் அழகை மேம்படுத்த பல முயற்சிகளை செய்து கொண்டு வருகிறோம்.அந்த வகையில் நாம் நமது சருமத்தை மிகவும் பாதுகாப்பது அவசியம்.நாம் நமது சருமத்தை பருவ நிலைக்கு ஏற்றவாறும் பாதுகாப்பது மிகவும் அவசியம். கோடை காலங்களில் முகத்தை அடிக்கடி தண்ணீரை வைத்து கழுவுவது மிகவும் நல்லது. நமது சருமத்தை நாம் பாதுகாக்க ஜூஸ் மற்றும் தண்ணீர் அதிகஅளவில் குடித்து வருவது மிகவும் நல்லது.
கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் அது நமது சருமத்திற்கு நல்ல பொலிவை தருவதோடு சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் தடுக்கிறது. இதனை நாம் தினமும் குடித்து வருவதால் சருமத்திற்கு மிகவும் நல்லது.
பீட்ருட்டில் வைட்டமின் சி ,பொட்டாசியம், போலிக் அமிலம், மெக்னீசியம், முதலிய சத்துக்கள் காணப்படுவதால் இந்த ஜூஸை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.இது நமது உடலில் உள்ள இரத்தத்தை சுத்தபடுத்தி நமது சருமத்திற்கு பொலிவையும் கொடுக்கிறது.
தக்காளி ஜூஸை நாம் தினமும் குடித்து வருவதால் நமது சருமத்தில் உள்ள சுருக்கங்களையும், சருமத்தை எப்போதும் முதிர்ச்சி அடையாமல் வைக்க மிகவும் உதவுகிறது.இது சருமத்தில் உள்ள துளைகளை குறைக்கவும் உதவும்.
தக்காளியை வெட்டி அதில் சர்க்கரையை தொட்டு முகத்தை ஸ்கரப் செய்து வர முகம் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.
சருமத்தில் எப்போதும் உலர விடாமல் பாதுகாக்க வெள்ளரிக்காய் ஜூஸை குடிப்பது மிகவும் நல்லது.இதில் இருக்கும் அஸ்கார்பிக் அமிலம் முகத்தை எப்போதும் உலராமல் வைத்திருக்க உதவுகிறது.
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…