பலாப்பழம் சாப்பிட்டதும் மறந்தும் இந்த பொருளை சாப்பிடாதீங்க..!

Jackfruit-பலாப்பழத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.
பலாப்பழத்துடன் சாப்பிட கூடாத உணவுகள்;
பலாப்பழத்துடன் பப்பாளி பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது இது உடலில் அரிப்பு, சொறி சிரங்கு ,வீக்கம், கட்டிகள் போன்றவற்றை ஏற்படுத்தும் அதனால் பலாப்பழம் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து வேண்டுமானால் பப்பாளி எடுத்துக் கொள்ளலாம்.
பலாபழம் சாப்பிட்டுவிட்டு பால் குடிக்க கூடாது .ஏனென்றால் இரண்டுமே குளிர்ச்சியான பொருள் இதனால் வயிற்றுப்போக்கு வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.
பலாப்பழம் அல்லது பலா காயுடன் வெண்டைக்காயை சேர்த்து சாப்பிடுவதோ சமைப்பதோ கூடாது .இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்க கூடும் மேலும் வெண்படை வரவும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.
பலாவுடன் தேன் கலந்து எடுத்துக் கொள்ளக்கூடாது இதனால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்படுகிறது.
தவிர்க்கவேண்டியவர்கள் ;
சர்க்கரை நோயாளிகள் ,கர்ப்பிணிகள் ,பாலூட்டும் தாய்மார்கள் ,2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ,ஆர்தரைட்டிஸ் ,வாயு தொந்தரவு, உள்ளவர்கள் தவிர்க்கவும் ,உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் செரிமான பிரச்னை உள்ளவர்கள் குறைவாக எடுத்து கொள்ளவும் .
பலாப்பழத்தின் நன்மைகள்;
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளது ,இது கண் பார்வை திறனை அதிகரிக்கிறது .கண்புரை உள்ளவர்கள் மற்றும் பார்வை திறன் குறைபாடு உள்ளவர்கள் பலாப்பழம் கிடைக்கும் சமயங்களில் எடுத்துக் கொள்வது நல்லது.
தைராய்டு உள்ளவர்கள் பலாப்பழத்தை எடுத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் தைராய்டு சுரப்பிக்கு செம்பு சத்து அதிகம் தேவைப்படும் .இந்த பலாவில் அதிகம் செம்பு சத்து உள்ளது அதனால் தைராய்டு உள்ளவர்களும் தைராய்டு வரக்கூடாது என்று நினைப்பவர்களும் பலாப்பழத்தை எடுத்துக் கொள்வது நல்லது.
பலாப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கு தேவையான என்சைம்களை உற்பத்தி செய்யும் .இதனால் மலச்சிக்கல் வராமல் தடுப்பதோடு குடல் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. மேலும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. பலாப்பழம் அதிகம் எடுத்துக் கொள்ளும் போது சரும பளபளப்பு அதிகரிக்கிறது.
மேலும் இதில் கால்சியம் ,பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளதால் எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது. ஆஸ்டியோபொராசிஸ் வராமலும் தடுக்கிறது. ரத்த அழுத்தம், பக்கவாதம் ,மாரடைப்பு போன்றவை வருவதையும் தடுக்கிறது.
கருப்பை பிரச்சனை ,முறையற்ற மாதவிலக்கு உள்ளவர்கள் பலாப்பழத்தை எடுத்து கொள்வதால் கருப்பையில் உள்ள அழுக்குகள் வெளியேற்ற படும்.
எனவே பலாப்பழம் கிடைக்கும் காலங்களில் அளவோடு எடுத்து கொண்டு அதன் ஆரோக்கிய நன்மைகளை பெறுங்கள் .
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025