இனிமே மறந்து கூட இந்த உணவுகள் எல்லாம் சாப்பிடாதீங்க.!

unhealthy food

Avoid foods-நம் தெரிந்தும் தெரியாமலும் சாப்பிடும் இந்த உணவுகள் நமக்கு பல நோய்கள் வர காரணமாய் இருக்கிறது .அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

சிப்ஸ் வகைகள்:

சிப்ஸ் வகைகள் அதிக கலோரிகளை கொண்டுள்ளது. இதை நாம்  தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை அதிகரிப்பு மற்றும் வயிற்றில் நுண் கீறல்களை உண்டாக்குகிறது இதனால் அல்சர் ஏற்படுகிறது மேலும் இதன் சுவைக்காக பல ரசாயனங்களும் சேர்க்கப்படுகிறது இதை பெரும்பாலும் குழந்தைகள்தான் சாப்பிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இது சில நேரங்களில் இரத்த குழாய் அடைப்பை கூட ஏற்படுத்தும்.

சோடா வகைகள்:

மார்க்கெட்டுகளில் பல வகைகளில் குளிர்பானங்கள் கிடைக்கிறது இதில் எந்த ஒரு இயற்கையான பொருட்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தண்ணீருடன் கேஸ் மற்றும் உப்பு இவற்றை மட்டுமே அடைத்து வரக்கூடியது இதனால் வால்வு  தளர்ச்சி மற்றும் கிட்னி பிரச்சனைகள் வர அதிக வாய்ப்பு உள்ளது.

பழச்சாறு குளிர்பானங்கள்:

இன்று மார்க்கெட்டிகளில் கிடைக்கும் மாம்பழச் சாறு ,ஆரஞ்சு சாறு போன்றவை முழுக்க முழுக்க இயற்கையாகவே  தயாரிக்கப்பட்டு வருவதில்லை, இது நம் கைகளுக்கு வர பல மாதங்கள் ஆகிறது இது கெட்டுப் போகாமல் இருக்க பல ரசாயனங்களும், நிறத்திற்காக ரசாயனங்களும் சேர்க்கப்படுகிறது.

நூடுல்ஸ்:

தற்போது இது அனைத்து உணவகங்களிலுமே பிரதானமான உணவாகிவிட்டது. இதன் சுவைக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுகிறது இது அதிக கலோரிகளை கொண்டுள்ளது. இதை அதிகமாக நாம் எடுத்துக் கொள்ளும்போது சிறுநீர் செயல்பாடுகளில்  பாதிப்பு ஏற்படுத்தும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் ஏனென்றால் இது மைதாவால் தயாரிக்கப்படுகிறது.

ரெடிமேட் சூப் வகைகள்:

தற்போது ரெடிமேடாகவே   சூப் வகைகள் வந்துவிட்டது. இது நம் வேலைகளை சுலபமாக்குவதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தண்ணீரில் போட்டு சூடு செய்தாலே சூப் ரெடி ஆகிவிடும். ஆனால் இதில் பல ரசாயனங்களும் கலக்கப்பட்டு உள்ளது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.  அஜினமோட்டோ சேர்க்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் சுவைக்கேற்ப அதாவது அசைவச்சுவை வேண்டுமென்றால் அதற்கேற்ப சுவையூட்டி ரசாயனமும் சைவ சூப் என்றால் அதற்கு ஏற்ப ரசாயனமும் கலக்கப்பட்டு வருகிறது.

ரெடிமேட் உணவுகள்:

வேகமான வாழ்க்கை முறையில் வேலையை சுலபமாக பலவிதமான ரெடிமேட் உணவுகள் வந்துவிட்டது அதில் குறிப்பாக ரெடிமேட் சப்பாத்தி போன்றவை. இதுபோல் முன்பே சமைத்து வைக்கப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் அனைத்துமே நம் உடலுக்கு கெடுதிதான்.

அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக நாம் முறுக்கு, மிக்சர், பானி பூரி போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும் ஏனென்றால் இது மலக்குடல் அலர்ஜி, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது ஆகவே அவ்வப்போது எடுத்துக் கொள்வது தவறில்லை.

இவை அனைத்தும் நவீன காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பது நம் நினைவில் வைத்துக் கொள்ளவும். மேலும் இந்த உணவுகளை நாம் ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் சாப்பிடத் தூண்டும் நம்மை அடிமைப்படுத்தக்கூடிய உணவு வகைகள் ஆகும். ஆகவே நாம் முடிந்தவரை வீட்டில் சமைக்கக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்