அடடே இந்த பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? பலாப்பழத்தில் உள்ள இதுவரை நாம் அறிந்திராத மருத்துவ குணங்கள்!

Default Image

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் நாம் அனைவரும் உண்ண கூடிய ஒரு பழம் தான். இந்த பழத்தை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு பழம்.

தற்போது, இந்த பதிவில் பலாப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

புற்றுநோய்

Image result for புற்றுநோய்

பலாப்பழத்தில் புற்றுநோயை தடுக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. பலாப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டு ஆகிய அமில சத்துக்கள், நமது உடலில் புற்றுநோய் கிருமிகள் உருவாகாமல் தடுத்து, நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இரத்த அழுத்தம்

Image result for இரத்த அழுத்தம்

பலாப்பழம் இரத்தம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பலாப்பழத்தில் பொட்டாசிய சத்து அதிகமாக இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரித்து, இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை குணமாக்குகிறது.

கண் பார்வை

Image result for கண் பார்வை

பலாப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண் சம்பந்தமான பிரச்சனையை நீக்க கூடியது. இந்த பழத்தில் கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகமாக உள்ளது. அவை பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுப்பதோடு, கண்களில் புரை ஏற்படுவதையும் தடுக்கிறது.

ஆஸ்துமா

Image result for ஆஸ்துமா

ஆஸ்துமா நோயினால் அவதிப்படுபவர்கள், இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயில் இருந்து விடுதலை பெறலாம்.

நோய் எதிர்ப்பு ஆற்றல்

Image result for நோய் எதிர்ப்பு ஆற்றல்

பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்