அட இதனால் கூட முதுகு வலி வருமா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே.!

Published by
K Palaniammal

Back pain-முதுகு வலி ஏற்பட காரணங்களும் அதனை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

நம் உடலில் உள்ள அனைத்து தசைகளின் அழுத்தமும் முதுகுத்தண்டில் சேர்வதன் மூலம் அங்கு  வலி ஏற்படுகிறது.  தினசரி வாழ்வில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் தான் முதுகுவலி வர  காரணமாக உள்ளது.

முதுகு வலி ஏற்பட காரணங்கள்:

இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் உள்ளாடைகள் அணிவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த இறுக்கமான ஆடைகளை அணியும் போது தசைகளுக்கு அழுத்தம் ஏற்படுகிறது .இதனால் சில நேரங்களில் ரத்த ஓட்டம் செல்வது தடை படுகிறது இதன் காரணமாகவும் முதுகு வலி ஏற்படும் .

மேலும் ஜீன்ஸ் போன்ற பேண்டுகளில் பர்ஸ் வைப்பது வழக்கம்தான் .அந்த பர்ஸ் வைத்து நாம் அமரும்போது சரியான நிலையில் அமர மாட்டோம் இதனால் கூட முதுகு வலி ஏற்படுகிறது. அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது இது முதுகு வலி ஏற்படுவதோடு குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது  .

ஹை கீல்ஸ் போன்ற காலணிகளை பயன்படுத்துவதால் உடல் சமநிலையாக இருக்காது .மேலும் இது எலும்புகளுக்கு கூடுதல் அழுத்தத்தையும் கொடுக்கிறது இதுவும் முதுகு வலி ஏற்பட காரணமாக உள்ளது.

அது மட்டுமல்லாமல் பல வருடங்களாக ஒரே மெத்தைகளை பயன்படுத்துவது ,நாம் உட்காரும்போதும் படுக்கும் போதும் முதுகுத்தண்டை  வளைத்து அமர்வது, குறிப்பாக குஷன் போன்ற மெத்தைகளை பயன்படுத்துவதன் மூலம் தண்டுவடத்தை அது வளைய செய்கிறது இதனாலும் முதுகு வலி ஏற்படும்

அதிகமாக உடற்பயிற்சி செய்வது மற்றும் அவசர அவசரமாக உடற்பயிற்சி செய்வது இந்த காரணங்களினாலும் முதுகு வலி ஏற்படும். மேலும் உடல் எடை அதிகமாக இருப்பது, அதிக எடை கொண்ட பொருள்களை தூக்குவது, ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணத்தாலும்  முதுகு வலி ஏற்படும்.

அதுமட்டுமல்லாமல் புகை பிடித்தல் பழக்கம் இருப்பவர்களுக்கு முதுகு வலி ஏற்படுகிறது. ஏனென்றால் புகை பிடிக்கும் போது நம் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சுவதை தடுக்கிறது.

கால்சியம் அதிகம் எடுத்தால் முதுகு வலி குணமாகுமா?

கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது எலும்புகளுக்கு நல்லது என பலருக்கும் தெரியும் .இதனால் பால் தயிர் போன்றவற்றை நாம் அதிகம் எடுத்துக்கொள்வோம். ஆனாலும் ஒரு சிலருக்கு முதுகு வலி இருக்கும். இது ஏனென்றால் நம் உடலில் குறிப்பிட்ட வயது வரைக்கும் தான் ரெனின் என்ற என்சைம் சுரக்கும்.

இதுதான் உணவில் உள்ள கால்சியத்தை பிரித்தெடுப்பதற்காக உதவி செய்கிறது. ஆனால் இந்த என்சைம் வயதாகும் போது குறைய துவங்கி விடும். இதனால்தான் நாம் என்னதான் கால்சியம் உணவுகளை எடுத்துக் கொண்டாலும் உடலானது கால்சியத்தை உறுஞ்ச  முடிவதில்லை.

அது மட்டுமல்லாமல் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கார்பனேட் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் இதில் உள்ள பாஸ்போரிக் ஆசிட் கால்சியம் உறிஞ்சுவதை தடுக்கிறது.

சரி செய்யும் முறை:

முதலில் உங்களுக்கு எந்த காரணத்தினால் முதுகு வலி வருகிறது என்று ஆராய்ந்து பாருங்கள். முதலில் அதை சரி செய்ய முயற்சி செய்யுங்கள். பிறகு நீங்கள் அமரும்போது உங்கள் முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமருங்கள். அதிகமாக படுத்துக்கொண்டே இருப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பிறகு அதற்கான உடற்பயிற்சி மற்றும்யோகாசனங்களை செய்யும்போது முதுகு வலி பறந்து போய்விடும்.

Published by
K Palaniammal

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

13 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago