காலை உணவை தவிர்த்தால் உடல் பருமனை குறைக்கலாமா?
இயந்திரம் போன்று இயங்கி கொண்டிருக்கும் இந்த உலகில், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வெளியில் வேலைக்கு செல்லும் முதியவர்கள் அனைவருமே தங்களை இயந்திரமாக்கி கொண்டு தான் வாழ்கின்றனர்.
இதனால், பலரும் தங்களது காலை உணவை தவிர்த்து தங்களது வேலையில் கவனம் செலுத்தி வருகின்றன. பலர் காலை உணவை தவிர்த்து விட்டால் எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் மதியம் அதிகமாக பசி எடுக்கிறது. இதனால் மதிய உணவு அதிகமாக உட்கொண்டு விடுகிறார்கள்.
இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. காலை உணவை தவிர்க்கும் போது உங்களது உடலில் பசிக்கான ஹார்மோன் அதிகமாக தூண்டப்படுவதோடு, நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.
மேலும், காலை உணவை சாப்பிடாமல் இருந்தால், உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின் போன்ற சத்துக்கள் கிடைக்காமல் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகக் கூடும். உடல் எடையை குறைக்க நினைத்தால் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாம், இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.