அல்சர் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப இந்த 5 பழங்களை சாப்பிடுங்க

Default Image

நாம் சரியான முறையில் உணவை உட்கொள்வதில்லை. இதன் காரணமாக குடல் புண் நோய் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்.

நம்மில் பலரும் பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி காலையில் எழுந்தவுடன் பரபரப்பாக வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு, அலுவலக வேலைகளை நோக்கி செல்வதுண்டு. இதனால் நாம் சரியான முறையில் உணவை உட்கொள்வதில்லை. இதன் காரணமாக குடல் புண் நோய் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 5 பழங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

மாதுளை பழம்

மாதுளை பழம் அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த ஒரு பழமாகும். இதனை பழமாக எடுப்பதைவிட, மாதுளை பிஞ்சை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அந்த மாதுளை பிஞ்சை எடுத்து, நன்கு தண்ணீரில் கழுவி, பின்பு மேல் தோலுடன் சேர்த்து அதனை நன்கு மென்று சாப்பிட்டால் போதும். இதனை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் குடல் புண் விரைவில் ஆறிவிடும்.  மாதுளை பழத்தை பழமாக அல்லது பழ சாறாக உட்கொள்ளலாம்.

இவ்வாறு மாதுளைப் பழத்தை சாப்பிடும் போது, எப்போதாவது இருந்துவிட்டு சாப்பிடுவது தவறு. நோயை குணப்படுத்த விரும்பினால் வாரம் இருமுறை அல்லது மூன்று முறை பழத்தை சாப்பிடும் பழக்கத்தை கொள்ள வேண்டும்.

சப்போட்டா

சப்போட்டா பழம் வயிற்று புண்களை ஆற்றக் கூடிய ஒரு அற்புதமான பழமாகும். இதனை காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட வேளையில் சாப்பிட வேண்டும் அல்லது மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் இடைப்பட்ட இடைவெளி எடுத்துக் கொள்ளலாம்.

அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு நடுராத்திரியில் வயிற்று வலி அல்லது வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்போது உடனடியாக சப்போட்டா பழத்தை சாப்பிடும் போது இது ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

கொய்யாப்பழம்

அதிகமான விதைகளை கொண்ட நாட்டுக் கொய்யாப்பழத்தை வாங்கி நன்றாக மென்று ஒரு நாளைக்கு இரண்டு கொய்யாப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் குடல்புண்ணை ஆற்ற கூடிய தன்மை கொண்ட பழம் என்னவென்றால், நாட்டு வாழைப்பழம். இந்த வாழைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்ணை ஆற்று தன்மை உள்ளது. வயிற்றுப்புண்ணை ஏற்படுத்தக்கூடிய அமிலத்தன்மையை குறைக்கக்கூடிய சக்தி வாழைப் பழத்துக்கு உள்ளது.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் எடுத்துக் கொள்ளும்போது அவை அல்சர் புண்களை குணப்படுத்த போதுமானதாகும். இப்படிப்பட்ட பழங்களை எடுத்துக் கொள்ளும்போது தேன் கலந்து சாப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொண்டு அதில் சாறு எடுத்து, சம அளவு தேன் எடுத்துக் கொண்டு  உணவிற்குப்பின் அதாவது ஒரு மணி நேரம் கழித்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் ஆறுவதை கண்கூடாக பார்க்க முடியும்.

விதை உள்ள திராட்சை

விதை உள்ள கருப்பு திராட்சை ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒரு கைப்பிடி அளவு சாப்பிடுவதற்கு முன்பாக அல்லது சாப்பிட்ட பின் எடுத்துக் கொண்டால் அல்சர் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்