மாதவிடாய் வலி – நூற்றில் 90 சதவீதம் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி ஏற்படுகிறது. இது ஒவ்வொரு பெண்களுக்கும் மாறுபடும். ஒரு சிலருக்கு முதுகு வலி அல்லது வாந்தி போன்றவை கூட ஏற்படும் ஆனால் இன்று நாம் வயிற்று வலி ஏன் வருகிறது அதற்கான தீர்வு பற்றி தெரிந்து கொள்வோம்.
காரணங்கள்:
ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு முன்பே கூட வலிகள் ஏற்படும். இந்த வலிகள் பல காரணங்களினால் ஏற்படுகிறது. கர்ப்பப்பை கட்டிகள் சாக்லேட் சிஸ்ட், நீர் கட்டி போன்ற தொந்தரவுகள் இருந்தால் கூட வலிகள் சற்று அதிகமாக இருக்கும்.
ரத்தத்தில் ப்ரோஸ்டோ கிளாண்டன்ஸ் என்ற கெமிக்கல் இயற்கையாகவே சுரக்கும், இது அளவோடு சுரந்தால் பிரச்சனை இல்லை. மாதவிடாய் காலங்களில் இந்த புரோஸ்டோ கிளாண்டன்ஸ் சற்று அதிகமாக சுரந்து கர்ப்பப்பை தசைகளை இறுக்கி பிழியும் அப்போதுதான் அதிக வலி ஏற்படும். ஆகவே இந்த கெமிக்கல் அளவை கட்டுப்படுத்த வேண்டும் அதற்கு கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வயிற்று வலி குறைய எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறை:
கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பால் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம், கீரைகளில் பசலைக்கீரை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எலுமிச்சை, ஆரஞ்சு நெல்லிக்கனி போன்றவற்றில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.
வலி என்பது தாங்க கூடிய அளவிற்கு இல்லாமல் சற்று அதிகமாக இருந்தால் நம்மால் அன்றாடம் வேலைகளை பார்ப்பதில் சிரமம் ஏற்படும். ஆகவே இந்த முறைகளை கடைபிடித்து பயன்பெறலாம் இதையும் தாண்டி வலிகள் இருந்தால் மருத்துவரை அணுகி அதற்கு ஏற்ப சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்..
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…