மாதவிடாய் நேரங்களில் வயிறு வலியால் அவதிப்படுறீங்களா? இதோ அதற்கான தீர்வு..!

மாதவிடாய் வலி – நூற்றில்  90 சதவீதம் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி ஏற்படுகிறது. இது ஒவ்வொரு பெண்களுக்கும் மாறுபடும். ஒரு சிலருக்கு முதுகு வலி அல்லது வாந்தி போன்றவை கூட ஏற்படும் ஆனால் இன்று நாம் வயிற்று வலி ஏன் வருகிறது அதற்கான தீர்வு பற்றி தெரிந்து கொள்வோம்.

காரணங்கள்:

ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு முன்பே கூட வலிகள் ஏற்படும். இந்த வலிகள் பல காரணங்களினால் ஏற்படுகிறது. கர்ப்பப்பை கட்டிகள் சாக்லேட் சிஸ்ட், நீர் கட்டி போன்ற தொந்தரவுகள் இருந்தால் கூட வலிகள் சற்று அதிகமாக இருக்கும்.

ரத்தத்தில் ப்ரோஸ்டோ கிளாண்டன்ஸ்  என்ற கெமிக்கல் இயற்கையாகவே சுரக்கும், இது அளவோடு சுரந்தால் பிரச்சனை இல்லை. மாதவிடாய் காலங்களில் இந்த புரோஸ்டோ கிளாண்டன்ஸ் சற்று அதிகமாக சுரந்து கர்ப்பப்பை தசைகளை இறுக்கி பிழியும் அப்போதுதான் அதிக வலி ஏற்படும். ஆகவே இந்த கெமிக்கல் அளவை கட்டுப்படுத்த வேண்டும் அதற்கு கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வயிற்று வலி குறைய எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறை:

கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பால்  அதிகமாக எடுத்துக் கொள்ளலாம், கீரைகளில் பசலைக்கீரை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள பொருட்களையும் உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும் எலுமிச்சை, ஆரஞ்சு நெல்லிக்கனி போன்றவற்றில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.

  • அதிகமாக வயிற்று வலி இருக்கும் போது புதினா இலைகளை அரைத்து எலுமிச்சை சாரில் கலந்து தேன் அல்லது உப்பு சேர்த்து குடித்தால் உடனே ரத்தத்தில் கலந்து புரோஸ்டோகிளாண்டன்ஸ்   அளவை குறைத்து வலியை குறைக்கும்.
  • வெந்தயத்தை நீரில் ஊறவைத்து குடிக்கலாம். இந்த வெந்தயம் எல்லோருக்கும் சரியானது இல்லை, ஒரு சிலருக்கு பொருந்தாது அதற்கு பதில் சோம்பு ஊற வைத்து அந்த நீரை குடிக்கலாம்.
  • அடிவயிற்று பகுதியில் சுடு தண்ணீர் ஊற்றி குளித்து வரலாம் அல்லது சுடு தண்ணீரை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
  • அடி வயிற்று பகுதியில் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம்.

வலி என்பது  தாங்க கூடிய அளவிற்கு இல்லாமல் சற்று அதிகமாக இருந்தால் நம்மால் அன்றாடம் வேலைகளை பார்ப்பதில் சிரமம் ஏற்படும். ஆகவே இந்த முறைகளை கடைபிடித்து பயன்பெறலாம் இதையும் தாண்டி வலிகள் இருந்தால் மருத்துவரை அணுகி அதற்கு ஏற்ப சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்