இடுப்பு வலியால் அவதிப்படுகிறீர்களா…? அப்ப இதை செய்து பாருங்க….!!!

Default Image

இடுப்புவலி வேலை பார்க்கும் அனைவருக்கும் ஏற்பாடாக் கூடிய ஒன்று தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இந்த இடுப்புவலி ஏற்படுகிறது. நமது ஒழுங்கற்ற நடைமுறைகள் இதற்க்கு முக்கிய காரணம்.

Related image

இந்த இடுப்புவலிக்கு எவ்வளவு மருத்துவம் பார்த்தாலும் சரி வராது. அது சரியாக நமது நடைமுறைகளை சரியான முறையில் மாற்ற வேண்டும். இந்த பதிவில் இடுப்பு வலி வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

தடுக்கும் முறைகள் :

இருக்கை :

Image result for இருக்கையில் அமர்ந்து தான் வேலை

அதிகமானோர் வேலை பார்க்கும் போது இருக்கையில் அமர்ந்து தான் வேலை பார்க்கிறோம். வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அந்த இருக்கையில் அமர்ந்திருக்கும் போது, அது நமது இடுப்பு பகுதியை பாதிக்கிறது. எனவே இருக்கை அமர்ந்து வேலைபார்ப்போர் அடிக்கடி எழுந்து செல்லலாம்.

மேசை உயரம் :

கணினி வைத்து வேலை செய்வோர் கண்டிப்பாக மேசையை பயன்படுத்துவதுண்டு. நாம் உட்கார்ந்து இருக்கும் இருக்கையும், மேசையும் சரியான உயரத்தில் இருக்க வேண்டும்.

Related image

 

நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு, மேசையை ஏற்றி, இறக்கும் வண்ணம் இருக்க வேண்டும். அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும்.

உடற்பயிற்சி :

Image result for உடற்பயிற்சி :

இடுப்புவலி உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது போல வேலை முடிந்தவுடனும் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது இடுப்பு வலியில் இருந்து விடுதலை பெறலாம்.

நாற்காலி :

Image result for மேசை உயரம் :

நாற்காலியில் அமரும்போது சரியான முறையில் அமர வேண்டும். அமரும்போது முதுகு புறமும், இடுப்பு பகுதியும் சாய்ந்திருக்குமாறு வசதியாக உட்கார வேண்டும். நாற்காலியில் அமரும் விதம் சரியாக இல்லையென்றால், இடுப்புவலி ஏற்படுகிறது. எனவே நாம் உட்காருவதற்கு ஏற்ற நாற்காலியில் அமர வேண்டும்.

நின்ற நிலையில் வேலை :

Image result for இடுப்புவலி

நீண்ட நேரம் நின்ற நிலையில் வேலை செய்பவர்களுக்கு இடுப்பவலி ஏற்படுவதற்கான அதிகமான வாய்ப்புகள் உள்ளது. நின்ற நிலையில் வேலை பார்பவர்களுக்கு இடுப்பு மட்டுமல்லாமல் முதுகு வளைவிற்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்