அடிக்கடி உணவை தவிர்ப்பவர்களா நீங்கள்? அப்ப உங்களுக்காக இந்த பதிவு…!

Published by
லீனா

நாம் நமது வாழ்க்கை சூழலில், பல வேளைகளில் உணவை தவிர்ப்பதுண்டு. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இந்த பதிவில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம். 

நமது அன்றாட வாழ்வில் வீட்டுவேலைகள், அலுவலக வேலைகள் என சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதை மறந்துவிடுகிறோம். மேலும் பலர் பசி உணர்வு இல்லாத காரணத்தினாலும், சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று உணவை தவிர்க்கின்றனர். இது நமது உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. உணவை தவிர்ப்பதால் நான் பின்வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

குறைந்த இரத்த சர்க்கரை அளவு

உணவை தவிர்ப்பதால், உடலில் இரத்தத்தில் இரத்த சர்க்கரை அளவு கடுமையாக குறைகிறது. இதனால் நாம் என்ன செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

உடல் தொந்தரவுகள்

ரத்தத்தில் சர்க்கரை அளவும் பசியை அளவு குறைவதால், நீங்கள் நாள் முழுவதும் எரிச்சலுடன் காணப்படுபவர்கள். இதனால் ஒட்டுமொத்த நரம்புகளும் பாதிக்கப்படுவதோடு, இது மன நலத்திற்கு நல்லது அல்ல. உணவை தவிர்ப்பதால் மனநிலை மாறுதல், கவனம் சிதறுதல், எரிச்சல், ஒற்றைத் தலைவலி மற்றும் உணர்ச்சி தொந்தரவுகள் ஆகியவை ஏற்படும். இது காலப்போக்கில் மனச்சோர்வுக்கு வழிவகுத்து கடுமையான நடத்தை மாற்றங்களுக்கும் வழிவகுக்கும்.

அதிகப்படியான பசி உணர்வு

நாம் உண்ணாவிரதம் மேற்கொண்டு உணவை தவிர்த்தால் இறுதியில் நாம் உண்ணாவிரத்தை முடிக்கும் போது, நாம் முன்னர் சாப்பிட்டதை விட அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றும். இதனால் நமது உடல் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்ளும்.

தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை கணக்கெடுப்பு ஆய்வின்படி பரிந்துரைக்கப்பட்ட அளவு புரதத்தை தினமும் உட்கொள்ளாத பெரியவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் உணவை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளனர். 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒரு நாளைக்கு 3 வேளைக்கும் குறைவான உணவை சாப்பிடுவதால் கூறப்படுகிறது.

புரதச்சத்து குறைபாடு ஏற்படும்போது ஒருவரால் நீண்ட நேரம் உட்காருவது அல்லது படுக்கைக்கு செல்வதிலிருந்து அல்லது வெளியே செல்வதில் சிரமம் ஏற்படும். இதனால் உடல் பலவீனமாக காணப்படும்.

ஊட்டச்சத்து

நீண்ட காலத்திற்கு உணவை தவிர்ப்பது மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் ஊட்டச்சத்து வெற்றிடத்திற்கு வழிவகுக்கும். இது வலிமை மற்றும் சகிப்பு தன்மையை குறைத்து, நீண்ட கால குறைபாடுகள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

சரியான முறையில் உணவு உட்கொள்வது எப்படி?

உங்கள் உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்து வழங்க கூடிய ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க நல்ல ஊட்டச்சத்து மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் கோழி, கடல் உணவு, முட்டை, பீன்ஸ், பால் போன்ற புரத உணவுகளை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சிற்றுண்டிகள்

நாம் இடைவேளையில் சில சிற்றுண்டிகளை உட்கொள்ள விரும்புவதுண்டு. அப்போது பயறு வகைகள், உலர்ந்த பழங்கள் அல்லது தயிர் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.  புரதம் நிறைந்த முழு பழங்களான கொய்யா, கிவி பழம் போன்றா ஊட்டச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ளுதல், உடலுக்கு ஆற்றலையும், வலிமையையும் தருகிறது.

பயணத்தின்போது  உணவு உட்கொள்ள விருப்பமில்லாத பெரியவர்கள், ஊட்டச்சத்து நிறைந்த பானங்களை அருந்துவதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இது நமது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.

Published by
லீனா

Recent Posts

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

6 minutes ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

1 hour ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

1 hour ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

2 hours ago

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

13 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

13 hours ago