Leg cramps-இரவில் கால் நரம்புகள் இழுப்பதற்கான காரணங்களும் அதற்கான உணவு முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
நம்மில் பலரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கால் நரம்புகள் சுண்டி இழுப்பது .இது குறிப்பாக இரவில் தூங்கும் போது தான் ஏற்படுகிறது.
நம் உண்ணும் உணவில் எலெக்ட்ரோலைட்ஸ் என்று சொல்லக்கூடிய சோடியம், மெக்னீசியம் ,கால்சியம், பாஸ்பரஸ், குளோரைடு போன்றவை தினமும் நம் உண்ணும் உணவில் இருக்க வேண்டும்.
இதில் குறைபாடு இருப்பது மற்றும் விட்டமின்ஸ் குறைபாடு, பகலில் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பது ,போதிய உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, ஹார்மோனல் இம்பேலன்ஸ் மற்றும் சரியான ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பது, டயுரிட்டி மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்வது போன்ற காரணங்களால் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
தினமும் ஏதேனும் ஒரு பழம் ,வாரத்திற்கு மூன்று முறையாவது கீரைகள் மற்றும் விதை உணவுகள் போன்றவற்றை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பழங்களில் குறிப்பாக தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மிக நல்லது.இதில் பொட்டாசியம் ,கால்சியம், மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்ஸ் அதிகம் உள்ளது இதை எடுத்துக் கொண்டாலே நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து விடும்.
மேலும் பப்பாளி பழத்தில் விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. பொட்டாசியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் உள்ளது. தர்பூசணையில் நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட் அதிகம் நிறைந்துள்ளது வெயில் காலத்தில் தர்பூசணியை எடுத்துக் கொள்வது சிறந்தது .
அடுத்ததாக சர்க்கரை வள்ளி கிழங்கு மற்றும் பால் ,தயிர் ,மோர் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளவும். அசைவ உணவுகளில் மத்தி மீன், சால்மன் மீன், சூரை மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.
காய்கறிகளில் ப்ரோக்கோலி மற்றும் காலிஃப்ளவரில் அதிக அளவு எலக்ட்ரோலைட்ஸ் உள்ளது. இதில் ஏதேனும் ஒன்றையாவது தினந்தோறும் உணவில் சுழற்சி முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதுபோல் நரம்பு சுண்டி இழுக்கும் தொந்தரவு உள்ளவர்கள் தூங்குவதற்கு முன் வெந்நீர் குடிப்பது நல்லது மேலும் கருவேப்பிலையை பொடி செய்து வைத்துக் கொள்ளவும், இதை காலை 11 மணி அளவில் வெந்நீரில் கலந்து வடிகட்டி குடித்து வர வேண்டும்.
அது மட்டுமல்லாமல் கருப்பு உளுந்து வறுத்து அதில் சிறிதளவு சீரகம் ,உப்பு ,பெருங்காயம் ஆகியவற்றை குறைவான அளவில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை மதிய உணவு எடுத்துக் கொள்ளும் போது ஒரு கை அளவு உணவில் ஒரு ஸ்பூன் இந்த பொடியை சேர்த்து அதனுடன் நெய் அல்லது நல்லெண்ணையை சேர்த்து கலந்து முதலில் அந்த சாதத்தை எடுத்துக் கொள்ளவும். பிறகு உணவு எடுத்துக் கொள்ளவும்.
இதுபோல் மேற்கொள்ளும் போதும் நாளடைவில் இந்தப் பிரச்சனை குறைந்து விடும். மேலும் தண்ணீர் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணியாவது ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…