அடிக்கடி உங்களுக்கு சளி காய்ச்சல் வருதா ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!

அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனாலே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது என்று தான் அர்த்தம். அப்போ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துத்தநாகம், வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் டி சத்து அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

துத்தநாகம்(சிங்க் )

அனைத்து வகையான கீரை வகைகளிலும் தானிய வகைகளிலும் அதிகம் உள்ளது. காலை உணவாக ஏதேனும் ஒரு தானிய வகைகளை சேர்த்துக் கொள்வது அவசியமானது.

விட்டமின் சி

நெல்லிக்காயில் மிக மிக அதிக அளவில் உள்ளது நெல்லிக்காயை முடிந்தவரை பச்சையாக எடுத்துக் கொள்வதே சிறப்பு. இதைத் தவிர கொய்யாப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, முருங்கைக்கீரை, குடைமிளகாய்,  லெமன் போன்றவற்றில் உள்ளது. ஒரு நாள் ஒன்றுக்கு 500 மில்லி கிராம் விட்டமின் சி தேவைப்படுகிறது. ஒரு நெல்லிக்காய் அல்லது ஒரு கொய்யாப்பழம் எடுத்துக் கொண்டாலே ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் சி நமக்கு கிடைத்துவிடும்.

விட்டமின் டி

விட்டமின் டி சத்து உணவுப் பொருட்களில் மிக குறைந்த அளவில் தான் காணப்படுகிறது .பால், சீஸ் ,முட்டையின் மஞ்சள் கரு, மீன், காளான் போன்றவற்றில் சிறிதளவு உள்ளது 10-12  மணிக்குள் உள்ள சூரிய ஒளியில் நம் தோல் முழுமையாக படும்படி 15 நிமிடம்  நிற்க வேண்டும். இது  விட்டமின் டி உற்பத்திக்கு உதவியாக இருக்கும்.

ஒரு நாளைக்கு ஏழு முதல் 9 மணி நேரமாவது தூங்குவது அவசியம். நம் தூக்கம் ஐந்து சுழற்ச்சியாக நடக்க வேண்டும், அதாவது ஒரு சுழற்சி என்பது ஒன்றை மணி நேரமாகும். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தண்ணீர் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் ஆவது எடுத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் பழைய சாத காஞ்சி எடுத்துக்கொண்டால் நல்ல பாக்ட்ரியாவை உருவாக்கும்.வாரத்தில் 3 நாள் ஆவது எடுத்துக்கொள்ள வேண்டும் .நோய் எதிர்பாற்றலுக்கு குடல் ஆரோக்கியம் மிக  முக்கியம் .குடல் ஆரோக்கியமே உடல் ஆரோக்கியம் .

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சுத்திகரிக்கப்பட்ட மாவு சத்து நிறைந்த பொருட்கள், பேக்கரி பொருட்கள். துரித உணவுகளை எடுத்துக் கொள்வது, பயன்படுத்திய ஆயுளை மீண்டும் பயன்படுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைக்கப்படும்.

ஆகவே நாம் நலமுடன் ஆரோக்கியமாக வாழ நம் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் நன்றாக இருக்க வேண்டும் அதுதான் நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கிறது ஆகவே நம் உணவில் விட்டமின் சி அதிகம் உள்ள காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை சேர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson