இரவில் கீரையை ஏன் சாப்பிடக்கூடாது தெரியுமா? அப்போ இந்த பதிவை படிங்க..!
கீரை வகைகளை நாம் அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் மருத்துவரை அணுக வேண்டி இருக்காது. ஆனால் அதுவே இரவில் எடுத்துக் கொண்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே இரவில் ஏன் கீரை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கீரையை எப்படி சாப்பிட வேண்டும் , எதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம் .
இதனால் தான் இரவில் கீரை சாப்பிட கூடாதா ?
கீரையில் நிறைய வகைகள் உள்ளது. இதில் அதிக அளவு தாது சத்துக்களும், விட்டமின் சத்துக்களும், நுண் சத்துக்களும் நிறைந்துள்ளது. கீரைகளை தினமும் ஒரு வேலையாவது எடுத்துக் கொள்வது அவசியமானது. இவ்வாறு நாம் எடுத்துக் கொண்டால் பல நோய்கள் நம்மை அணுகாமல் பார்த்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் வாரம் இரண்டு நாட்கள் ஆவது கீரைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சையம் கீரையில் அதிகம் உள்ளது அதுபோல் நார் சத்தும் அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்து செரிமானம் ஆக சூரிய ஒளி தேவைப்படுகிறது, இதனால்தான் காலை அல்லது மதிய வேலைகளில் கீரை பரிந்துரைக்கப்படுகிறது. இரவில் எடுத்துக் கொண்டால் செரிமான கோளாறு ஏற்படும் அதன் பலனை முழுமையாக பெற முடியாது.
கீரையுடன் சேர்க்க கூடாத உணவுகள்
பொதுவாக கீரை சமைக்கும்போது தற்போதைய காலகட்டத்தில் பால் சேர்த்து சிலர் செய்கிறார்கள் அவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தயிருடன் கீரை சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் பல பெயர் தெரியாத தோல் வியாதிகள் வர வாய்ப்புள்ளது.
கீரை சாப்பிடும் முறை
காலை வேலைகளில் பொறியல் அல்லது கடையல் போன்று சாப்பிடலாம். மதிய நேரத்திற்கு மேல் சென்று விட்டால் சூப்பாக எடுத்துக் கொள்வது சிறந்தது. டெல்டா பகுதிகளில் கீரையை கழனி தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைப்பார்கள் . தேங்காய் பால் சேர்த்ததற்கு பிறகு கொதிக்க வைக்க கூடாது. கொதிக்க விடாமல் இறக்கி சாப்பிடலாம். மாலை 5 மணி வரை கீரை சூப் எடுத்துக் கொள்ளலாம் அதற்கு மேல் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
எனவே காலை வேளையில் இட்லி தோசைக்கு பதில் கீரையை எடுத்துக் கொண்டால் இதன் முழு சத்தும் நம் உடல் உறிஞ்சிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.