கோடை காலத்தில் ஏன் பாதாம் பிசினை சாப்பிட வேண்டும் தெரியுமா ?

badam pisin

பாதாம் பிசின் – பாதாம் பிசினின் நன்மைகள் , அதை எவ்வாறு எடுத்து கொள்ளலாம் என்பதை  பற்றி இப்பதிவில் காணலாம்.

பாதாம் பிசின்:

பாதாம் பிசின் பாதாம் மரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது, இது ஜிகர்தண்டாவில்  பயன்படுத்தப்படும் ஒரு பொருளும் கூட. உடல் உஷ்ணத்தை குறைக்கக்கூடியது. இதில் ஏராளமான நுண் சத்துக்கள், தாது சத்துக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள்,  விட்டமின் இ சத்துக்கள்  நிறைந்து காணப்படுகிறது.

பாதாம் பிசினின் நன்மைகள்:

  • உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலி, வயிற்று கடுப்பு, அல்சர் புண் ,முடி கொட்டுதல்,முகப்பரு ,வேனை கட்டி  போன்ற பிரச்சனைகளை தீர்க்க வல்லது.
  • அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொண்டால் செரிமான பிரச்சனை ஏற்படும். இந்த சமயத்தில் பாதாம் பிசினை எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பாதாம் பிசினை கொழுப்பு இல்லாத பாலில் கலந்து குடித்து வரலாம்.
  • உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் கொழுப்பு உள்ள பாலில் இரவு நேரத்தில் கலந்து குடித்து வரலாம்.
  • நாள்பட்ட  நோயால் பாதிக்கப்பட்டு உடல் வலிமை இழந்தவர்கள், பாதாம் பிசினை வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டால் விரைவில்  உடல் எடை கூடும்.
  • சிறுநீரகப் பிரச்சனை ,சிறுநீரக எரிச்சல், நீர் கடுப்பு போன்றவற்றிற்கு உடனடி நிவாரணம் தரும். மேலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கக் கூடியது.
  • ஆண்மை குறைவை போக்க  ஊற வைத்த பாதாம் பிசினை ஒரு ஸ்பூன் அளவு வெதுவெதுப்பான பாலில் இரவு வேளையில் கலந்து குடிக்கவும்.
  • மேலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் ,மாதவிடாய் சுழற்சி கோளாறு போன்றவற்றை சரி செய்ய காலை, மாலை என ஒரு ஸ்பூன்  மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளவும்.
  • கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்வதால் கருவில் உள்ள குழந்தையின் எலும்புகள் வலுவாகும்.மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் .
  • ரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுக்கும், ஞாபக சக்தியை தரும். பிற்காலத்தில் அல்சைமர் ஏற்படுவதை தடுக்கும். மூலநோய் உள்ளவர்களுக்கும் பாதாம் பிசின் அருமருந்தாகும்.
  • பாதாம்  பிசினை தீக்காயம் ,வெட்டு காயம், உள்ள இடத்தில்   தடவி வர விரைவில் குணமாகும்.

எடுத்துக் கொள்ளும் முறை:

பாதாம் பிசினை இரவில் சுத்தம் செய்து 5 கிராம் அளவு ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு பெரியவர்கள் என்றால் ஒரு ஸ்பூன் விதமும், சிறியவர்கள் என்றால் அரை ஸ்பூன் வீதமும் எடுத்துக் கொள்ளலாம்.

வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துக்கொள்வது போதுமானது. இதை தண்ணீர், ஜூஸ், பால், சர்பத் போன்ற பானங்களில் கலந்து குடிக்கலாம்.தினமும் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியவர்கள்:

அலர்ஜி, ஆஸ்துமா,சைனஸ்  உள்ளவர்கள் தவிர்க்கவும் ஏனென்றால் இது உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக்க கூடியது அதனால் சளி தொந்தரவை ஏற்படுத்தும்.

ஆகவே அளவோடு எடுத்துக்கொண்டு பாதாம் பிசினின் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்