கருஞ்சீரகம் –கருஞ்சீரகத்தின் பக்க விளைவுகள் மற்றும் அதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
கருஞ்சீரகத்தால் குணப்படுத்த முடியாத நோய்களை இல்லை என்று கூறலாம் .பல வகையான புற்று நோய்களுக்கு கருஞ்சீரகத்திலிருந்து தான் மருந்து தயாரிக்கப்படுகிறது. கருஞ்சீரகத்தில் 97 சதவீதம் நன்மை இருந்தாலும் 3% பக்க விளைவுகளும் உள்ளது. அளவுக்கு அதிகமாக தொடர்ந்து பலமுறை எடுத்துக் கொண்டாலோ அல்லது பல வியாதி இருப்பவர்கள் எடுத்துக் கொண்டாலும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
கருஞ்சீரகத்தை ஒரு மண்டலம் அல்லது இரண்டு மண்டலம் தான் சாப்பிட வேண்டும் .அதை தவிர்த்து வருட கணக்கில் தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறு மற்றும் சிறுநீரக அலர்ஜியை ஏற்படுத்தும் என அமெரிக்காவில் உள்ள MSKCC – (Memorial Sloan Kettering Cancer Center ) என்ற ஆய்வு நிறுவனம் ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் கருஞ்சீரகம் சாப்பிடக்கூடாது என்றும் MSKCC ஆய்வு நிறுவனம் உறுதி செய்துள்ளது .இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் குழந்தை பேருக்கு முயற்சி செய்பவர்களும் கருஞ்சீரகத்தை சாப்பிட கூடாது என்றும் MSKCC நிறுவனம் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவர்களும் கருஞ்சீரகம் சாப்பிடக்கூடாது.
கருஞ்சீரகத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. அதனால் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது .ஏனென்றால் இது ரத்த அழுத்தத்தின் அளவை மேலும் குறைத்து ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
அதேபோல் ரத்தத்தில் அதிக சர்க்கரையை குறைக்கும் தன்மையை கருஞ்சீரகம் கொண்டுள்ளதால் குறைந்த சர்க்கரை அளவு உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
மூக்கின் வழியாக ரத்தம் ஒரு சிலருக்கு அடிக்கடி வரும் தொந்தரவு இருக்கும் .அவர்கள் கருஞ்சீரகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது ரத்தம் உறைதலை தடுத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்பை கொண்டுள்ளது.
Cytochrome p450 substrates போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது எக்காரணத்தைக் கொண்டும் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அமெரிக்காவின் MSKCC ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
எனவே கருஞ்சீரகம் அதிக நன்மையை கொண்டிருந்தாலும் ஒரு சிலர் ஒரு சில நேரங்களில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மேலும் கருஞ்சீரகத்தை உட்கொள்வதற்கு முன் சித்த மருத்துவரின் ஆலோசனை படி குறைந்த காலத்தில் குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் அதன் ஆரோக்கிய நன்மைகளை எளிதில் பெறலாம்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…