இதமான இளநீரை யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா..?
வெயில் காலத்தில் மிகப் பிரபலமான பானம் என்றால் அது இளநீர் தான் இளநீரில் பல சத்துக்கள் இருந்தாலும் அதை ஒரு சில எடுத்துக்கொள்ளக் கூடாது, அது யாரெல்லாம் என்பது பற்றியும் இளநீரின் நன்மைகள் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
இளநீரில் உள்ள சத்துக்கள்
இளநீரில் 90 சதவீதம் நீர் சத்து உள்ளது மேலும் நுண் சத்துக்களும், சோடியம், பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் அமினோஅமிலங்களும் அதிகம் காணப்படுகிறது.
பயன்கள்
- லாரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால் பூஞ்சை தொற்று மற்றும் பாக்டீரியாவை அழிக்கிறது மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், டென்ஷனை குறைக்கவும் இளநீர் உதவுகிறது.
- வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் ஓ ஆர் எஸ் குடிநீருக்கு பதில் இளநீர் கொடுக்கலாம். இது உடனடி எனர்ஜியை கொடுக்கும்.
- வயிற்றுப் பிரச்சனை, குமட்டல் ,பசியின்மை போன்றவற்றை குணமாக்க உதவுகிறது. இளநீரில் டானின் இருப்பதால் வயிறு எரிச்சல் உணர்வை போக்குகிறது மேலும் வயிற்றில் உள்ள புழுக்கள் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
- உடல் சூடு உள்ளவர்கள் இளநீரை தினமும் எடுத்துக் கொள்ளலாம். உடலில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது.
- உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியைத் தரும் .வியர்க்குருவுக்கு சிறந்த மருந்தாகும்.
- சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீரை கொண்டு ஒத்தடம் கொடுத்தால் எரிச்சல்,அரிப்பு குறையும் , விரைவில் குணமாகும் .
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்
இளநீரில் உடலுக்கு தேவையான உயிர் சத்துக்கள் அதிகமாக இருந்தாலும் கிட்னி பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் அதிக சர்க்கரை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். அலர்ஜி பிரச்சனைகள் சைனஸ் பிரச்சனை மற்றும் குளிர்ச்சியான உடல் உள்ளவர்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
வெறும் வயிற்றில் காலை நேரத்தில் இளநீரை எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் தடகள வீரர்களுக்கு ஏற்ற பானமாக இளநீர் இல்லை.
ஆகவே வெயில் காலத்தில் குளிர்பானங்களையும் ஜூஸ் வகைகளையும் நாடி செல்வதை விட நம் இயற்கையின் குடிநீரான இளநீரை வாரத்திற்கு இரண்டு நாள் அல்லது மூன்று நாட்களாக எடுத்துக்கொண்டு அதன் நற்பலனை பெற்று உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.