pirandai
பிரண்டை -பிரண்டையில் உள்ள மருத்துவ நன்மைகள் பற்றியும் ,எப்படி சாப்பிடவேண்டும் எனவும் இப்பதிவில் காண்போம்.
பிரண்டையை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தியை கொடுத்து ,பசியை தூண்டும் தன்மை பிரண்டைக்கு உள்ளது.
பிரண்டையில் விட்டமின் சி, விட்டமின் ஈ, கால்சியம் மிக மிக அதிகமாக உள்ளது. எந்த உணவிலிமே இல்லாத கெட்டோஸ்டிராய்டுகள், ப்ரீடீலின், ரெஸ்வெராட்ரோல் போன்ற உயிர் வேதிப்பொருள்கள் உள்ளது.
நாவில் சுவையின்மையை போக்கி, நல்ல ஜீரண சக்தியை கொடுத்து, பசியை தூண்டும்.உடலையும் மூளையையும் சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும் .
முறிந்து போன எலும்பை ஒன்றாக்கும் ஆற்றல் இந்த பிரண்டைக்கு உண்டு . எலும்பு முறிவை சரி செய்து எலும்பை மறு சீரமைக்கும் . எலும்பு தேய்மானத்தை குறைக்கும்.
மூலம், குடல் புழு ,கீழ்வாதம், ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவற்றிற்கு சிறந்த மாமருந்தாக உள்ளது.
உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் தன்மை உள்ளது.நீரிழிவு ரத்த அழுத்தம் வராமல் பாதுகாக்கும் .
உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது ஏற்படும் வலியை குறைக்கும் தன்மை பிரண்டைக்கு உள்ளது.
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்த துணை மருந்தாக கொடுக்கப்படுகிறது.
பிரண்டையை ஜூஸ் ஆக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் இது தலைவலி, உடல் சூடு அதிகரிப்பு ,நாவறட்சி ஆகியவற்றை ஏற்படுத்தும்.
பிரண்டையை தேர்ந்தேர்த்தெடுக்கும் போது அதன் நுனிப்பகுதியை தேர்வு செய்யவும்.அடிப்பகுதி என்றால் நாக்கு அரிக்கும் தன்மையை அதிகப்படுத்தும் .
ஆகவே அவ்வப்போது பிரண்டையை உணவுகளில் சட்னி ஆகவோ, குழம்பாகவோ,துவையலாகவோ சேர்த்துக்கொண்டு அதன் ஆரோக்கிய நன்மைகளை பெறுங்கள் .
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …